ஹனிமூன் போறதையும் விளம்பரப்படுத்திய இந்திரஜா சங்கர்.. கார்த்திக்கோட எந்த நாட்டுக்கு போறாரு தெரியுமா?
சென்னை: நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மகள் எந்த இந்திரஜா சங்கர் கடந்த மார்ச் மாதம் 24-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா தத்தெடுத்து வளர்த்த தம்பியான கார்த்திக் தான் இந்திரஜா சங்கரை திருமணம் செய்து கொண்டார்.
பிப்ரவரி மாதம் தொடங்கிய நிச்சயதார்த்த கொண்டாட்டம் முதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்த சென்னை ரிசப்ஷன் வரை ஏகப்பட்ட செலவுகளை செய்து பல பிரபலங்களை அழைத்து விருந்து வைத்து கல்யாணம்னா இப்படி தான்பா பண்ணனும் என்கிற ஆசையை பலருக்கும் தூண்டி அமர்க்களப்படுத்தி விட்டனர்.

இந்நிலையில், திருமணத்துக்கு அடுத்து ஹனிமூன் செல்ல திட்டமிட்ட இந்திரஜா சங்கர் அது தொடர்பான விளம்பர வீடியோ ஒன்றையும் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ரோபோ சங்கர் மகள் திருமணம்: விஜய் டிவியில் கலக்கப் போவது யார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரோபோவாக நடித்து கலக்கிய ரோபோ சங்கர் சிவாஜி முதல் பல பிரபலங்களின் குரல்களில் பேசி ரசிகர்களை கவர்ந்தார். சிவகார்த்திகேயன் எப்படி கலக்கப் போவது யார் நிகழ்ச்சியிலிருந்து சினிமாவுக்கு வந்தாரோ அதேபோல ரோபோ சங்கரும் சினிமாவில் காமெடி நடிகராக வளம் வந்தார். திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக கடும் போராட்டத்திற்கு பிறகு மீண்ட ரோபோ சங்கர் தனது மகள் இந்திரஜா சங்கருக்கு திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என நினைத்து அதை சாதித்தும் காட்டிவிட்டார்.
கமல்ஹாசன் முதல் சிவகார்த்திகேயன் வரை: சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை எஸ்பிபி கார்டனில் நடைபெற்ற பிரம்மாண்ட வரவேற்பு தொலைக்காட்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். நடிகர்கள் ராமராஜன், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
ஹனிமூன் எங்கே?:இந்திரஜா சங்கர் மற்றும் கார்த்திக் அடுத்ததாக ஹனிமூன் செல்ல திட்டமிட்டுள்ளனர். விரைவில் ஹனிமூன் கலாட்டா வீடியோக்களும் புகைப்படங்களும் வெளியாகும் என தெரிகிறது. மலேசியாவுக்கு ஹனிமூன் செல்ல இருவரும் திட்டமிட்ட நிலையில் அது தொடர்பான விளம்பர வீடியோ ஒன்றை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
கம்மி பட்ஜெட்டில்: இந்திரஜா வந்து தனது கணவர் கார்த்திக்கிடம் அடுத்ததாக ஹனிமூனுக்கு மலேசியா போகலாமா எனக் கேட்கிறார். இப்போதான் அதிக செலவு செய்து திருமணம் நடைபெற்றது. மலேசியாவுக்கு எல்லாம் போக வேண்டும் என்றால் மேலும் பல லட்சம் செலவாகும் எனக் கூறுகிறார். அவ்வளவு எல்லாம் ஆகாது வெறும் 14,999க்கு 4 நாள் 3 நைட்டு மலேசியாவில் பல இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு வந்து விடலாம் என டூர் நிறுவனம் ஒன்றுக்கு விளம்பரம் செய்துள்ள வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார்.
ஹனிமூன் வீடியோ: கூடிய விரைவில் இந்திரஜா சங்கர் மற்றும் கார்த்திக்கின் ஹனிமூன் வீடியோ காட்சிகளும் மலேசியாவில் இவர்கள் போட்ட கொண்டாட்டத்தையும் இந்திரஜா சங்கரின் ஹேப்பி மூமென்ட்டுகளையும் வெளியிடுவார் என தெரிகிறது. கடந்த ஒரு வாரமாக இந்திரஜாவின் பரிசுப் பொருள் பிரித்துப் பார்க்கும் வீடியோவே சோஷியல் மீடியாவில் அதிகம் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அடுத்த கட்ட வீடியோக்களை பார்க்க ரசிகர்கள் ரெடியாகி விடுங்கள்.


Click it and Unblock the Notifications











