ஒரு ரூம் முழுவதும் கிஃப்ட்.. பிரிக்க பிரிக்க தங்கம், வெள்ளி பொருட்கள்.. இந்திரஜா செம ஹேப்பி!
சென்னை: ரோபோ சங்கர் மகள் இந்திரஜா சங்கர் திருமணம் மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் முடிந்த நிலையில், இன்னமும் அவர்கள் வீடியோ வெளியிடுவதை நிறுத்தவில்லை. அடுத்தக்கட்டமாக திருமணத்திற்கு வந்த பரிசுப் பொருட்களை ஒரு அறை முழுவதும் நிரப்பி வைத்து அதை கணவனும் மனைவியும் சேர்ந்து கொண்டு பிரித்துப் பார்க்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
ரோபோ சங்கர் தனது செல்ல மகள் இந்திரஜாவுக்கு கோலாகலமாக திருமணம் நடத்தி வைத்த நிலையில், திருமணம் மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பல சினிமா பிரபலங்கள் பங்கேற்றனர். மதுரையில் நடைபெற்ற திருமணத்தின் போதே நடிகர் சூரி மொய் பணமாக கவர் ஒன்றை கொடுத்திருந்தார்.

மேலும், திருமணம் மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சினிமா பிரபலங்கள் பலரும் விலை உயர்ந்த பரிசு பொருட்களை ரோபோ சங்கர் மகளுக்கு பரிசாக கொடுத்து சென்றனர். அந்த பரிசுப் பொருட்களை பிரித்துப் பார்க்கும் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பிரம்மாண்ட திருமணம்: தனது மகள் இந்திரஜா சங்கருக்கு ஜாம் ஜாம் என திருமணத்தை செய்து பார்க்க வேண்டுமென நினைத்த ரோபோ சங்கர் ஏகப்பட்ட பணத்தை செலவழித்து இந்திரஜா சங்கருக்கும் தனது மாப்பிள்ளை கார்த்திக்கும் திருமணம் நடத்தி வைத்தார். 15 லட்சம் மதிப்புள்ள ஹோண்டா எலிவேட் சொகுசு கார் ஒன்றையும் பரிசாக வழங்கினார். அந்த கார் வாங்கும் வீடியோவையும் சமீபத்தில் வெளியிட்டு இருந்தனர்.

ரூம் முழுக்க பரிசுப் பொருட்கள்: சுமார் 3000 பேர் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 9 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் திடீரென வந்துவிட்டதாக ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார். திருமணத்துக்கு வந்த பலரும் விலை உயர்ந்த பொருட்களை வழங்கி சென்ற நிலையில் அது ஒரு அறை முழுக்க வைத்து பிரித்துப் பார்க்கும் வீடியோவையும் தற்போது இந்திரஜா மற்றும் கார்த்திக் தம்பதியினர் வெளியிட்டுள்ளனர்.
தங்கத்தில் மணமக்கள் உருவம்: இந்திரஜா சங்கர் மற்றும் மாப்பிள்ளை கார்த்திக்கின் உருவம் பொறித்த தங்க நாணயங்களை பரிசாக வழங்கியுள்ளனர். மேலும், வெள்ளியில் காமாட்சி அம்மன் விளக்கு உள்ளிட்ட தங்கம் மற்றும் வெள்ளியினால் ஆன பரிசு பொருட்களை மணமக்களுக்கு வழங்கி உள்ளனர். நக்கீரன் கோபால் வழங்கிய பரிசுப் பொருள், அப்பாவுடன் 25 ஆண்டுகளாக பழகி வந்த நண்பர் கொடுத்த பரிசுப் பொருள் என ஒவ்வொன்றுக்குப் பின்னால் இருக்கும் வரலாற்றையும் அணையா விளக்கு பரிசாக கொடுத்திருக்கின்றனர் என்றும் இந்திரஜா அந்த வீடியோவில் அனைத்தையும் விவரித்துக் கூறி வருகிறார்.



Click it and Unblock the Notifications











