மாமாவுக்கு அனைவர் முன்னிலையிலும் லிப் கிஸ்.. தீயாக பரவும் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா வீடியோ!
சென்னை: சில மாதங்களுக்கு முன்னதாக கமல்ஹாசனை குடும்பத்துடன் ரோபோ சங்கர் தனது மகள் இந்திரஜா உள்ளிட்டோருடன் சென்று சந்தித்த நிலையில், இந்திரஜா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதாக வதந்திகள் வெளியாகின. ஆனால், அதன் பின்னர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரையும் சந்தித்து வந்த நிலையில், மகளின் திருமணத்துக்கான அழைப்பிதழ் கொடுக்கவே சென்றார் என கூறப்பட்டது. ஆனால், கடைசியாக சமீபத்தில் இந்திராஜாவுக்கும் அவரது மாமா கார்த்திக் என்பவருடன் நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்றது.
இது நிச்சயதார்த்தமா? அல்லது திருமணமா? என வியக்கும் அளவுக்கு மாலை எல்லாம் மாற்றிக் கொண்டு பிரம்மாண்டமாக நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், உடனடியாக இருவரும் அந்த இடத்திலேயே லிப் கிஸ் அடித்த காட்சிகள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

பிகில் பாண்டியம்மா: அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் பாண்டியம்மா தனது கதாபாத்திரத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்திருந்தார் இந்திரஜா சங்கர். முதல் படத்திலேயே அவரது நடிப்பு அனைவராலும் வெகுவாக ரசிக்கப்பட்டது. ரோபோ சங்கரின் மகள் சூப்பராக நடிக்கிறாரு என பாராட்டுக்களை அள்ளினார். அதன் பின்னர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார் இந்திரஜா சங்கர்.
அதிதி ஷங்கர் தோழி: கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்திலும் அதிதியின் தோழியாக இந்திரஜா ஷங்கர் நடித்திருந்தார். கோவை சரளாவுக்கு பிறகு தமிழ் சினிமாவில் பெண் காமெடியன்களுக்கான பற்றாக்குறை நுழைவு வரும் நிலையில், அந்த இடத்தை இந்திரஜா நிரப்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிரடியாக நிச்சயதார்த்தம் செய்து விரைவில் திருமண வாழ்க்கையில் நுழைய முடிவு செய்துள்ளார்.
இந்திரஜா சங்கர் நிச்சயதார்த்தம்: நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா ஷங்கரின் நிச்சயதார்த்தம் சில தினங்களுக்கு முன் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. பல சினிமா பிரபலங்கள் அந்த நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். பட்டு வேஷ்டி சட்டையில் மாப்பிள்ளை கோலத்தில் கார்த்தியும் பட்டு சேலையில் மணமகளாக இந்திரஜாவும் மாலை மாற்றிக் கொண்ட காட்சிகள் மற்றும் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் உள்ளிட்டவை வெளியாகி உள்ளன.
லிப் கிஸ்: தனது மாமாவுக்கு மாலை அணிவித்ததும் சொந்தங்கள் மற்றும் சுற்றங்கள் சூழ நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவிலேயே பச்செக்கென இருவரும் லிப் கிஸ் அடித்த காட்சிகள் தற்போது தீயாக பரவி வருகின்றன. இவர்கள் இருவரின் அவசரத்தை பார்த்த பலரும் நிச்சயதார்த்தத்துக்கு பதில் திருமணமே செய்து வைத்திருக்கலாம் என ரசிகர்கள் பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











