என் மாமன் மதுரை வீரன்.. திருமணத்திற்கு பின் தனது கணவருடன் இணைந்து இந்திரஜா வெளியிட்ட போட்டோ!
சென்னை: நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவின் திருமணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த திருமணத்தில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் இருந்து பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். தற்போது இந்திரஜா தனது கணவருடன் திருமணத்திற்கு பின் முதன் முதலாக எடுத்த போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற நடிகர் ரோபோ ஷங்கர், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், தனுஷ், விஜய் சேதுபதி, விஷால், விஷ்ணுவிஷால் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் காமெடியான நடித்து வந்த இவர் தற்போது வெயிட்டான குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

இந்திரஜா ஷங்கர்: ரோபோ ஷங்கர் சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் போதே, பல நிகழ்ச்சிகளில் தனது குடும்பத்தோடு கலந்துகொண்டதால், அவரது மனைவி பிரியங்கா, மகள் இந்திரஜா இருவருமே பிரபலமானார்கள். இதில், இந்திரஜா ஷங்கர், பிகில் படத்தில் நடிகர் விஜய்யுடன் பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய் அவரை குண்டம்மா, குண்டம்மா என்று பேசியது நகைச்சுவையாக இருக்கும். இந்த படத்தை தொடர்ந்து விருமன் படத்தில், பாவாடை தாவணியில் கிராமத்து பெண்ணாக நடித்து இருப்பார்.
முறைமாமனுடன் திருமணம்: இதையடுத்து, இந்திரஜா ஷங்கருக்கும் அவரின் முறைமாமன் கார்த்திக்கிற்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து விறுவிறுப்பாக திருமண வேலைகள் நடைபெற்று வந்தன. மதுரையில் திருமணம் நடைபெற இருந்ததால், திருமணத்திற்கு முன்னதாக ஹல்தி நிகழ்வு நடைபெற்றது. நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சின்னத்திரைப் பிரபலங்கள் மற்றும் வெள்ளித்திரைப் பிரபலங்கள் பலர் கொண்டு இந்திரஜாவிற்கு நலங்கு வைத்து மகிழ்ந்தனர்.

ஆனந்த கண்ணீர்: இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை ரோபோ ஷங்கரின் சொந்த ஊரான மதுரையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இதில், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ திருமணம் நடந்து முடிந்தது. இந்தத் திருமண வைபவத்தில் ஏராளமான திரைப் பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதில், மாப்பிள்ளை தாலி கட்டியதும், இந்திரஜா மூனு முடிச்சி போட்டியா என்று கேட்டுவிட்டு, ஆனந்தத்தில் கண் கலங்கினார்.
க்யூட் ஜோடி: இந்திரஜா மற்றும் கார்த்திக்கின் திருமணம் நடந்து முடிந்தாலும், சோஷியல் மீடியாவில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்த இவர்களின் திருமணத்தை பற்றித்தான் பேச்சாக உள்ளது. தற்போது மதுரையில் இருக்கும் இந்திரஜா தனது காதல் கணவருடன் திருமணத்திற்கு பின் எடுத்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் இந்த அழகான ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











