பிக் பாஸ்க்கு வரலை.. அதிரடியாக அறிவித்த பிரபலம்.. சும்மா அப்படி போட்டாலே கிளப்பி விடுறாங்களே?
சென்னை: பிக் பாஸ் வீட்டுக்கு ஏற்கனவே 2 பெண்கள் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்துள்ள நிலையில், இன்னொரு பெண் பிரபலம் வருவதாக சமூக வலைதளத்தில் சிலர் கொளுத்திப் போட்டது தீயாய் பரவியது.
ஆனால், தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில், கலந்து கொள்ளவில்லை என தற்போது அதிரடியாக அந்த பிரபலம் அறிவித்துள்ளார்.
அப்பாடா, பிக் பாஸ் வீட்டில் இதற்கு மேலாவது ஆட்கள் குறைவார்கள் என ரசிகர்களும் பெருமூச்சு விட்டு வருகின்றனர்.

’பிகில்’ இந்திரஜா சங்கர்
'பிகில்' படத்தில் சிங்கப்பெண் பாண்டியம்மாவாக நடித்த நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர் தான் பிக் பாஸ் வீட்டுக்கு அடுத்த வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைய போகிறார் என்கிற வதந்தி வைரலாக பரவியது. இந்நிலையில், அதனை திட்டவட்டமாக இந்திரஜா மறுத்துள்ளார்.

என்ன காரணம்
பிக் பாஸ் வீட்டுக்கு நடிகை இந்திரஜா சங்கர் வர உள்ளார் என்கிற வதந்தி பரவ என்ன காரணம் என்று பார்த்தால், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்ட ஒரு ஹோட்டல் அறை போட்டோ தான். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்காக நடிகை இந்திரஜா குவாரண்டைனில் உள்ளார் என்கிற தகவல் தீயாய் பரவியது.

சொகுசு ஹோட்டலில்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, கிட்டத்தட்ட 14 நாட்கள் சொகுசு ஹோட்டலில் குவாரண்டைன் செய்யப்படுவது வழக்கமாக்கப்பட்டுள்ளது. ரம்யா பாண்டியன், ஷிவானி, ரியோ ராஜ் தொடங்கி அர்ச்சனா, சுசித்ரா என அனைவரும் இது போல தங்க வைக்கப்பட்டு நிகழ்ச்சிக்குள் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.

ஆந்திராவில் ஷூட்டிங்
ஹோட்டல் அறையில் இருக்கும் புகைப்படத்தை இந்திரஜா சங்கர் வெளியிட்ட நிலையில், அவரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருகிறார் என்கிற தகவல் தீயாய் பரவியது. இதுபற்றி அறிந்த இந்திரஜா, தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. ஆந்திராவில் புதுப் படம் ஒன்றின் ஷூட்டிங்கிற்காக தங்கி இருக்கிறேன் என விளக்கம் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











