இன்னும் இத்தனை மாசத்துல குழந்தை பிறக்கப் போகுதா?.. இந்திரஜா சங்கரும் கார்த்தியும் சொன்ன குட் நியூஸ்!
சென்னை: காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர் திருமணம் இந்த ஆண்டு மார்ச் 24-ஆம் தேதி மதுரையில் நடைபெற்றது. இந்திரஜா சங்கரின் அம்மா பிரியங்காவின் வளர்ப்பு தம்பியான கார்த்திக் என்பவரை தான் பிகில் படத்தில் பாண்டியம்மாவாக நடித்த இந்திரஜா திருமணம் செய்து கொண்டார்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கரின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட ஒரு மாத காலம் திருமண கொண்டாட்டங்கள் களை கட்டின.

ஹல்தி கொண்டாட்டத்தை நடத்திய நிலையில், கடுமையான விமர்சனங்களும் கிளம்பின. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஜாம் ஜாம் என தனது முதல் திருமணத்தை ரோபோசங்கர் நடத்தி அசத்தினார். இந்நிலையில், சீக்கிரமே குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதாக மிஸ்டர் மிஸ்டர் சின்னத்திரை நிகழ்ச்சியில் இந்திரஜா சங்கர் மற்றும் கார்த்திக் தெரிவித்துள்ளனர்.
தள்ளிப் போடப்படும் தாய்மை: திருமணம் ஆனவுடனே குழந்தை பெற்றுக்கொள்வது எல்லாம் தற்போது ஃபேஷன் கிடையாது என்று பல நடிகைகள் மற்றும் சினிமா பிரபலங்கள் ஏன் பொதுமக்களே கருதுகின்றனர். நடிகைகள் பெரும்பாலும் 40 வயதுக்கு மேல் திருமணம் செய்து கொள்ளலாம் என்கிற முடிவில் உள்ளனர். சில நடிகைகள் திருமணமே வேண்டாம் என்கிற முடிவிலும் உள்ளனர். சில நடிகைகள் திருமணம் செய்து கொண்டாலும் லேட்டாக கல்யாணம் செய்து கொள்வதால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாமல் வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் நிலையும் உருவாகிறது.
9 மாசத்தில் குழந்தை: இந்த ஆண்டு மார்ச் 24-ஆம் தேதி திருமணம் நடைபெற்ற ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர் இன்னும் 9 மாதங்களில் குழந்தையை பெற்று விடுவோம் என்றே மிஸ்டர் சின்னத்திரை நிகழ்ச்சியில் நடிகை ராதா எழுப்பிய கேள்விக்கு உடனடியாக பதில் அளித்துள்ளார். இரு வீட்டிலும் ஒரே ஒரு குழந்தை என்பதால் தான். இரண்டு வீட்டாரும் குழந்தையை சீக்கிரமே எதிர்பார்க்கின்றனர். எங்களுக்கும் அதுதான் விருப்பம். அதற்கான முயற்சியில் உள்ளோம் என சந்தோஷ செய்தியை கூறியுள்ளார்.
பாராட்டிய ராதா: ராதா மற்றும் நீயா நானா கோபிநாத் இருவரும் மிஸ்டர் மிஸ்டர் சின்னத்திரை நிகழ்ச்சியில் ஜட்ஜாக உள்ள நிலையில், இந்திரஜா மற்றும் கார்த்திக் சொன்னதை கேட்டு இருவரும் சந்தோஷப்பட்டனர். எல்லாவற்றையும் பக்காவாக திட்டமிட்டு செய்வது சூப்பர் என்றும் இந்த காலத்தில் குழந்தை பெற்றுக் கொள்வதே ஓல்டு ஃபேஷன் என பெண்கள் கருதும் நிலையில், நீ சூப்பர்மா என நடிகை ராதா இந்திரஜாவை பாராட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











