INDRAJA ROBO SANKAR: 1000 தாமரை மொட்டுகளும்.. ரோபோ சங்கர் மகளும்.. அழகோ அழகு.. என்னாமா ஆடுறாங்க!

சென்னை: மறைந்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் தமிழ் திரையுலகம் அடையாளம் கண்டு அங்கீகரிப்பதற்கு முன்னரே சின்னத்திரையில் சிகரம் தொட்ட திறமைசாலி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு, அதன் பின்னர் நடுவராக உயரும் அளவுக்கு தனது நகைச்சுவை திறமை மூலம் மக்கள் மத்தியில் தனக்கான அங்கீகாரத்தை வென்றெடுத்தவர். இவரது மனைவி பிரியங்கா, மகள் இந்திரஜா என இவரது மொத்த குடும்பமுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் பெற்றவர்கள். கடந்த ஆண்டு ரோபோ சங்கர் மறைந்தது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

ரோபோ சங்கர் இறந்த துக்கத்தில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்து கொண்டு இருக்கும் அவரது குடும்பத்தினர் கடந்த சில மாதங்களாக தான் அதிகப்படியான பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்கள். ரோபோ சங்கருக்கு சிறந்த நகைச்சுவை நடிகர் தமிழ்நாடு மாநில விருதுகள் இரண்டு விருதுகள் வழங்கப்பட்ட போதும், தனது பேரன் நட்சத்திரனைத் தூக்கிக் கொண்டு சென்று விருதைப் பெற்று வந்தார், பிரியங்கா. இந்த விருது விழாவில் இந்திரஜா சங்கருக்கும் சிறந்த நகைச்சுவை நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.

Indraja Shankar s Bharatanatyam Video Goes Viral Fans Recall Late Robo Shankar and Request Veena Tribute
Photo Credit:

குடும்பம்: அதேபோல் நட்சத்திரனுக்கு காது குத்து விழாவைவும் குடும்பமாக சிறப்பாக நடத்தி முடித்தனர். சிவராத்திரியின் போது சிவன் கோவிலில் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர் பரதநாட்டியம் ஆடி, சிவனை வழிபட்டார். இது தொடர்பான புகைப்படங்களை ஏற்கனவே வெளியிட்டிருந்தார். அவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

பரதநாட்டியம்: இப்படி இருக்கையில் இந்திரஜா ரோபோ சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஆயிரம் தாமரை மொட்டுக்களே என்ற சினிமா பாடலுக்கு பரதநாட்டியம் ஆடி, வீடியோவாக பதிவிட்டு அதைப் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பலரும் மிகவும் அழகாக ஆடுகிறாரே என்று பாராட்டி வருகிறார்கள். பலரும் லைக்குகளை போட்டு வருகிறார்கள். அதேபோல் சில ரசிகர்களோ, ரோபோ சங்கர் பேட்டி ஒன்றில் நீங்கள் நன்றாக வீணை வாசிப்பீர்கள் என்று கூறினார். ரோபோ சங்கருக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றை வீணையில் வாசித்துக் காட்ட முடியுமா என்றும், முடிந்தால் அது தொடர்பான வீடியோவை பதிவிடவும் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Indraja Shankar s Bharatanatyam Video Goes Viral Fans Recall Late Robo Shankar and Request Veena Tribute
Photo Credit:

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X