’பிகில்’ பாண்டியம்மா திருமணத்தில் 2 முறை ஸ்டேஜ் உடைஞ்சிடுச்சாம்.. ரிசப்ஷனுக்கு இவ்ளோ செலவாச்சா?

சென்னை: காமெடி நடிகர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா சங்கர் திருமணம் கடந்த மார்ச் 24ம் தேதி மதுரையில் நடைபெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கமல்ஹாசன் தலைமையில் சென்னையில் பிரம்மாண்டமாக சினிமா பிரபலங்கள் பங்கேற்ற ரிசப்ஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.

அரசியல் பிரச்சாரத்தில் பிசியாக இருக்கும் நடிகர் கமல்ஹாசன் இந்திரஜா சங்கர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கமல்ஹாசனை தொடர்ந்து சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, சூரி, அதிதி ஷங்கர் உள்ளிட்ட ஏகப்பட்ட திரை பிரபலங்கள் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Indraja Shankar wedding reception expenses and stage broken twice details are here

எதிர்பார்த்ததை விட 3 மடங்குகள் கூட்டம் அதிகரித்த நிலையில், ஸ்டேஜ் 2 முறை உடைந்து விட்டதாக மாப்பிள்ளை கார்த்திக் பகீர் கிளப்பி உள்ளார்.

கோலிவுட்டின் பிரம்மாண்ட கல்யாணம்: தமிழ் சினிமாவில் இதுவரை எந்தவொரு பிரபலம் வீட்டுத் திருமணமும் இந்த அளவுக்கு பிரம்மாண்டமாக இத்தனை நாட்கள் திருவிழாவாக நடைபெற்றிருக்காது. நயன்தாரா திருமணத்தை கூட ரசிகர்கள் வீடியோவாக இன்னமும் பார்க்க முடியாத நிலையில், இந்திரஜா சங்கரின் திருமண வீடியோக்கள் யூடியூப் சேனலில் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.

9000 பேர் வந்துட்டாங்க: சுமார் 3000 பேர் வருவாங்க என்று தான் எதிர்பார்த்தோம். ஆனால், எங்கே இருந்து கூட்டம் வந்தது என்றே தெரியவில்லை. அதிகபட்சமாக 9000 பேர் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்துட்டாங்க. ஒரு இலைக்கு 1000 ரூபாய் சாப்பாடுன்னு வச்சாலே கோடி ரூபாய்க்கு மேல் சாப்பாட்டுக்கே ஆகியிருக்கும் எனக் கூறுகின்றனர்.

2 வாட்டி ஸ்டேஜ் உடைஞ்சிடுச்சு: பிகில் படத்தில் பாண்டியம்மாவாக நடித்த இந்திரஜா சங்கரை பலரும் உருவ கேலி செய்து வந்துள்ளனர். அவரது திருமண விழா வீடியோக்கள் கீழும் ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், திருமண வரவேற்பு ஸ்டேஜ் 2 முறை உடைஞ்சிடுச்சு என மாப்பிள்ளை கார்த்திக் சொல்லியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இரண்டு முறையும் ஸ்டேஜ்ஜை உடனடியாக சரி செய்துக் கொடுத்தனர். கட்டுக் கடங்காத கூட்டம் காரணமாக ஸ்டேஜில் ஓவர் வெயிட் போடப்பட்டு உடைந்து விட்டது என்றார்.

Indraja Shankar wedding reception expenses and stage broken twice details are here

2 முறை மயக்கம்: பிகில், விருமன் படங்களில் நடித்த நடிகை இந்திரஜா சங்கர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் என்னதான் ஏசி, டவர் ஃபேன் எல்லாம் வைத்திருந்தாலும், அதிகப்படியான கூட்டம் காரணமாக 2 முறை மயங்கியே விழுந்து விட்டார் என்றும் கார்த்திக் கூறியுள்ளார்.

எல்லாருக்கும் நன்றி: எங்கப்பா ரோபோ சங்கர் பணத்தை சம்பாதித்ததை விட இத்தனை மனிதர்களை சம்பாதித்துள்ளார் என்பது தான் எனக்கு சந்தோஷமே என இந்திரஜா பேசும் போது கூறினார். பல கோடி செலவு செய்து திருமணம், திருமண வரவேற்பு என செய்து மகளை சந்தோஷமாக கட்டிக் கொடுத்திருக்கிறார் ரோபோ சங்கர். திருமணத்துக்கு வந்த அனைவருக்கும் சமையல், பவுன்சர், யூடியூப் சேனல் என அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர். மறைந்த காமெடி நடிகர் விவேக்கின் மகள் திருமணம் இதற்கு எதிர்மாறாக எளிமையான முறையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X