twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    போதைப் பொருள் வழக்கில் நடிகை தீபிகாவா? ஜீரணிக்க முடியல.. அதிர்ச்சியில் அறிமுகப்படுத்திய இயக்குனர்!

    By
    |

    பெங்களூரு: போதைப் பொருள் வழக்கில் நடிகை தீபிகா படுகோனுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதை அடுத்து அவரை அறிமுகப்படுத்திய இயக்குனர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    போதைப் பொருள் வழக்கு பாலிவுட்டிலும் கன்னட சினிமாதுறையிலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    ஒவ்வொரு நாளும் இந்த விவகாரத்தில் புது புது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

     அப்படியா.. எனக்கு சம்மன் எதுவுமே வரலையே.. நடிகை ரகுல் ப்ரீத் சிங் அதிரடியாக மறுப்பு.. என்ன ஆச்சு? அப்படியா.. எனக்கு சம்மன் எதுவுமே வரலையே.. நடிகை ரகுல் ப்ரீத் சிங் அதிரடியாக மறுப்பு.. என்ன ஆச்சு?

    ராகிணி திவிவேதி

    ராகிணி திவிவேதி

    இந்த வழக்கில் முதலில் கன்னட நடிகைகள் ராகிணி திவிவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஆண்ட்ரிதா ராய், திகாந்த் உள்பட பல திரையுலகினர் விசாரிக்கப்பட்டுள்ளனர். இதே போல பாலிவுட்டில் நடிகை ரியா சக்கரவரத்தி உள்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ரகுல் பிரீத் சிங்

    ரகுல் பிரீத் சிங்

    அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மேலும் சிலருக்கு போதைப் பொருள் தடுப்பு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோருக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் சம்மன் அனுப்பி உள்ளனர். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்திரஜித் லங்கேஷ்

    இந்திரஜித் லங்கேஷ்

    இந்நிலையில், நடிகை தீபிகா படுகோனை 2006 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா என்ற கன்னடப் படம் மூலம் அறிமுகப்படுத்தியவர் இந்திரஜித் லங்கேஷ். இவர் போதைப் பொருள் பயன்படுத்தும் கன்னட நடிகர், நடிகைகள் பெயர்கள் அடங்கிய லிஸ்ட்டை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் கொடுத்தவர். அதன் அடிப்படையில் அங்கு விசாரணை தொடங்கியது.

    தீபிகா படுகோன்

    தீபிகா படுகோன்

    இந்த வழக்கில் தீபிகா படுகோனுக்கும் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளதை அடுத்து, இந்திரஜித் அதிர்ச்சி அடைந்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது: இது எனக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது. அவரை முதல் படத்தில் இருந்து நெருக்கமாக அறிந்தவன் நான். அவர் பற்றிய செய்தியை ஜீரணிப்பது கடினமாக இருக்கிறது.

    குற்றம் செய்திருந்தால்

    குற்றம் செய்திருந்தால்

    அவர் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று இருந்தார். பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. பாலிவுட்டில் மன அழுத்தம், சக நண்பர்களின் பாதிப்பு மற்றவர்களையும் தொற்றிக்கொள்ளும். அதற்காக நான் அவரை பாதுகாக்க முயற்சிக்கவில்லை. அவர் உண்மையிலேயே குற்றம் செய்திருந்தால் அது தவறு.

    நல்லதை தராது

    நல்லதை தராது

    தீபிகாவின் தந்தை ஒழுக்கத்தைப் பின்பற்றியவர். ஒருவர் தனது வேர்களை அறிந்திருந்தால், பெற்றோர் சந்தித்த சிரமங்களை புரிந்துகொண்டால், அது உங்களை காப்பாற்றி வளர்க்கும். நண்பர்களோ, போதை மருந்துகளோ நல்லதை தராது. இவ்வாறு இந்திரஜித் லங்கேஷ் கூறியுள்ளார்.

    English summary
    Indrajit Lankesh says he's shocked that Deepika Padukone hasbeen called for NCB inquiry
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X