போதைப் பொருள் பயன்படுத்தும் 15 நடிகர், நடிகைகள்.. ஆதாரத்தை வழங்கிய இயக்குனர்.. திரையுலகில் பரபரப்பு
பெங்களூரு: போதைபொருள் பயன்படுத்தும் நடிகர், நடிகைகள் குறித்த விவரங்களை போலீசாரிடம் ஒப்படைத்துவிட்டதாக பிரபல இயக்குனர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
பெங்களூருவில் தடை செய்யப்பட்ட எம்.டி.எம்.ஏ., எல்.எஸ்.டி. போதை மாத்திரைகளை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் கன்னட டிவி நடிகை அனிகா, கேரளாவைச் சேர்ந்த ரவீந்திரன், அனூப் ஆகியோர் என்பது தெரியவந்தது.

போதை மாத்திரைகள்
அவர்களிடம் இருந்து ஏராளமான போதை மாத்திரைகளை, பறிமுதல் செய்தனர். கைதான அனிகாவிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு கன்னட சினிமா நடிகர், நடிகைகளுடன் தொடர்பு இருப்பதாகவும் திரையுலகினர் நடத்தும் பார்ட்டிகளின் போது அனிகா போதை மாத்திரைகளை விற்று வந்ததாகவும் தெரியவந்தது. வெளிநாடுகளில் இருந்து தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை வாங்கி, திரையுலகினருக்கு விற்பனை செய்துள்ளனர்.

இந்திரஜித் லங்கேஷ்
இந்நிலையில், கன்னட சினிமாவில் நடக்கும் பார்ட்டிகளின் போது போதை பொருட்கள் பயன்பாடு இருப்பதாகவும், இளம் நடிகர், நடிகைகள் அதைப் பயன்படுத்துவதாகவும் பெங்களூருவில் சுட்டு கொலை செய்யப்பட்ட பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேசின் சகோதரரும், கன்னட பட இயக்குனருமான இந்திரஜித் லங்கேஷ் சில நாட்களுக்கு முன் கூறியிருந்தார்.

போலீஸ் நோட்டிஸ்
இது கன்னட சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. போதை பொருள் விவகாரம் குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், தேவைப்பட்டால் தனக்கு தெரிந்த தகவலை சொல்ல தயாராக இருக்கிறேன் என்றும் இந்திரஜித் லங்கேஷ் கூறி இருந்தார். இந்நிலையில் இதுபற்றி விளக்கம் அளிக்கும்படி இந்திரஜித் லங்கேசுக்கு, மத்திய குற்றப்பிரிவு போலீசார் நோட்டிஸ் அனுப்பி இருந்தனர்.

பெயர் பட்டியல்
இதையடுத்து நேற்று பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் ஆஜரான இந்திரஜித் லங்கேஷ், கன்னட சினிமாவில் போதை பொருள் பயன்பாடு குறித்து தனக்கு தெரிந்த தகவல்களையும் அது தொடர்பான ஆவணங்களையும் அவர்களிடம் ஒப்படைத்தார். மேலும் அவர் கன்னட சினிமாவில் போதை பொருள் பயன்படுத்தும் 15 பேரின் பெயர் பட்டியலையும் ஒப்படைத்துள்ளார்.

யார் மீதும் பயமில்லை
இதுபற்றி இந்திரஜித் லங்கேஷ் கூறும்போது, கன்னட சினிமாவில் போதை பொருட்களை பயன்படுத்தும் 15 பேரின் விவரங்களை கொடுத்துள்ளேன். போதை பொருட்களை பயன்படுத்தும் கன்னட திரையுலகினருக்கு தண்டனை கிடைக்க வேண்டும். இதன்மூலம் அடுத்த தலைமுறை நடிகர், நடிகைகள் அதைப் பயன்படுத்துவதை தவிர்க்க முடியும். எனக்கு யார் மீதும் பயமில்லை என்றார்.


Click it and Unblock the Notifications











