விஷ்ணு விஷாலின் மோகன்தாஸ் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்!

சென்னை: தரமான திரைப் படங்களில் நடிப்பதோடு அதைத் தயாரித்தும் வரும் நடிகர் விஷ்ணு விஷால் காடான், ஜெகஜாலக்கில்லாடி, எஃப் ஐ ஆர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இன்று நேற்று நாளை படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாக அதிலும் ஹீரோவாக நடிக்க விஷ்ணு விஷால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் முரளி கார்த்திக் இயக்கத்தில் மோகன் தாஸ் என்ற கிரைம் திரில்லர் படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் ஹீரோவாக ஏற்கனவே ஒப்பந்தமாகி இருக்க இப்போது பிரபல மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் இதில் இணைந்துள்ளார்.

வசூலையும் பாராட்டுகளையும்

வசூலையும் பாராட்டுகளையும்

முண்டாசுப்பட்டி படத்திற்குப் பிறகு மீண்டும் ராம் குமாருடன் இணைந்து விஷ்ணுவிஷால் பணியாற்றிய ராட்சசன் திரைப்படம் தமிழ் சினிமாவில் வெளியான சிறந்த சைக்கோ திரில்லர் திரைப்படங்களில் ஒன்றாக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நிலையில் வசூலையும் பாராட்டுகளையும் விருதுகளையும் இந்த படம் குவித்து வருகிறது. மேலும் தெலுங்கிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது.

இரு மொழிகளிலும்

இரு மொழிகளிலும்

காடுகளையும் யானைகளையும் வைத்து படங்களை இயக்குவதில் சிறப்பு பெற்றவரான இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்து வரும் காடான் படத்தில் தெலுங்கு நடிகர் ராணாவும் நடித்திருக்க தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இந்த படம் உருவாகி வருகிறது.

தயாரிப்பிலும் கவனம்

தயாரிப்பிலும் கவனம்

நடிப்பில் மட்டுமல்லாமல் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வரும் விஷ்ணு விஷால் தான் நடிக்கும் பெரும்பான்மையான திரைப்படங்களை சொந்த தயாரிப்பு மூலம் தயாரித்து வெளியிட்டு வரும் நிலையில் காட்டான், எஃப்ஐஆர், ஜெகஜாலக்கில்லாடி ஆகிய படங்களை தொடர்ந்து முரளி கார்த்திக் என்பவரின் இயக்கத்தில் மோகன் தாஸ் படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

 நடிகர் இந்திரஜித் சுகுமாரன்

நடிகர் இந்திரஜித் சுகுமாரன்

மோகன்தாஸ் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் முழுக்க முழுக்க கிரைம் திரில்லர் கதையில் உருவாக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. மேலும் இந்த படத்தை பற்றி அடுத்தடுத்த அப்டேட்டு வெளியாகும் என காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதமாக பிரபல மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் இந்தப் படத்தில் இணைந்துள்ளார்.

மோகன் தாஸ்

மோகன் தாஸ்

மலையாளத்தில் பிரபலமான நடிகராக உள்ள இந்திரஜித் சுகுமாரன் தமிழில் என் மன வானில், சர்வம், நரகாசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல நடிகர் ப்ரித்வி ராஜ்ஜின் சகோதரர் ஆவார். மோகன் தாஸ் படத்தில் இந்திரஜித் நடிக்க இருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இப்பொழுது வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X