சமூகம் பெரிய இடம் போலருக்கு… விரைவில் வருகிறது இன்று நேற்று நாளை இரண்டாம் பாகம்!

Recommended Video

இன்று நேற்று நாளை இரண்டாம் பாகத்தில், ஆர்யா - விஷ்ணு விஷால்.. யார் ஹீரோ?- வீடியோ

சென்னை: இன்று நேற்று நாளை திரைப்படத்தின் அடுத்த பாகம் துவங்க உள்ளதாக தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

சமீப காலங்களில் பெட்ரோல் விலை ஏற்றத்தை குறிப்பிட பயன்படுத்தபடும் மீம் "சமூகம் பெரிய இடம் போலருக்கு" என்பது தான். அந்த டயலாக் இடம்பெற்ற திரைப்படம் இன்று நேற்று நாளை. விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன், ஜெயப்பிரகாஷ், ரவி சங்கர் மற்றும் பலர் நடித்து 2015 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை ரவிக்குமார் இயக்கியிருந்தார்.

Indru Netru Nalai movie sequel!

டைம் ட்ராவல் படமான இன்று நேற்று நாளை மிகச்சிறந்த பொழுதுபோக்கு படமாக தயாராகியிருந்தது. டைம் மெஷினில் கடந்த காலத்திற்க்கு போவது, மியா குழந்தையாக பிறப்பதை அவரே பார்ப்பது, விஷ்ணு கடந்த காலத்திற்குச் சென்று நகை வாங்கப்போகும் போது நடக்கும் குழப்பம் போன்ற காட்சிகள் என்றும் மறக்க முடியாதவை.

ஹாலிவுட்டில் டைம் ட்ராவல் படமெல்லாம் மிகப்பெரிய பொருட்செலவில் எடுத்துக் கொண்டிருக்கும் போது, ஆர்ப்பாட்டமில்லாமல், ரசிக்கும்படியாக தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றதுபோல் திரைக்கதையை கையாண்டிருந்தார் ரவிக்குமார்.

தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் அறிவித்துள்ளது.

முதல் பாகம் வெற்றிபெற்றதால் இரண்டாம் பாகத்தை இன்னும் பிரம்மாண்டமாக தயாரிக்கலாம் எனத் தெரிகிறது. ஹீரோவாக நடித்த விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது ராட்சசன் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இரண்டாம் பாகத்தில் விஷ்ணு விஷால் அல்லது ஆர்யா நடிக்கலாம் என சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X