»   »  செட்டில் ஆனார் நடிகை இந்து! குட்டி குட்டி ரோல்களிலேயே நடித்து வந்த நடிகை இந்து, திடீரென மலேசியாவைச் சேர்ந்த வாலிபரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகி விட்டார்.காதல் கோட்டையில் தேவயானியின் தோழியாக, கண்ணெதிரே தோன்றினாள் படத்தில் சிம்ரனின் அக்காவாக, மிலிட்டரியில்சத்யராஜின் தங்கையாக கிட்டத்தட்ட 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் இந்து.குடும்பப் பாங்கான தோற்றத்தில் இருப்பதால் கடைசி வரை கதாநாயகி வாய்ப்பு கிடைக்காமல் குட்டி குட்டி ரோல்களிலேயேநடித்து வந்தார் இந்து. சமீப காலமாக அவருக்கு பட வாய்ப்புகள் சரி வர இல்லை. பிறகு இவருக்கு சினிமா வாய்ப்புகள் குறையதொடங்கியதும், சின்ன திரை பக்கம் ஒதுங்கி கொண்டு அங்கு ஒரு நிரந்தரமான இடத்தை பிடித்து கொண்டார்.சினிமாவில் கிடைத்த ரோல்களில் நடித்து வந்தார். இந் நிலையில் மலேசியாவைச் சேர்ந்த சுரேஷ் குமார் என்பவருக்கும், இந்துவுக்கும் காதல் ஏற்பட்டது. இந்தக் காதல் தற்போதுகல்யாணத்தில் முடிந்துள்ளது. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் கடந்த 11ம் தேதி இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இருவரும் எந்த அறிவிப்புமின்றி திடீரென்று திருமணம் செய்து கொண்டுள்ளனர்.சுரேஷ் மலேசியாவில் செல்போன் நிறுவனத்தில் அதிகாரியாக உள்ளார்.இரு வீட்டாரும், நெருங்கிய உறவினர்களும் மட்டும் இந்தக் கல்யாணத்தில் கலந்து கொண்டனர். திருமணத்தை முடித்துக்கொண்ட இந்துவின் திருமண வரவேற்பு சென்னை சவேரா ஹோட்டலில் நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. இந் நிகழ்ச்சியில் சினிமா நட்சத்திரங்கள் உள்பட இந்துவின் தோழிகள், சின்ன திரை நடிகர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

செட்டில் ஆனார் நடிகை இந்து! குட்டி குட்டி ரோல்களிலேயே நடித்து வந்த நடிகை இந்து, திடீரென மலேசியாவைச் சேர்ந்த வாலிபரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகி விட்டார்.காதல் கோட்டையில் தேவயானியின் தோழியாக, கண்ணெதிரே தோன்றினாள் படத்தில் சிம்ரனின் அக்காவாக, மிலிட்டரியில்சத்யராஜின் தங்கையாக கிட்டத்தட்ட 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் இந்து.குடும்பப் பாங்கான தோற்றத்தில் இருப்பதால் கடைசி வரை கதாநாயகி வாய்ப்பு கிடைக்காமல் குட்டி குட்டி ரோல்களிலேயேநடித்து வந்தார் இந்து. சமீப காலமாக அவருக்கு பட வாய்ப்புகள் சரி வர இல்லை. பிறகு இவருக்கு சினிமா வாய்ப்புகள் குறையதொடங்கியதும், சின்ன திரை பக்கம் ஒதுங்கி கொண்டு அங்கு ஒரு நிரந்தரமான இடத்தை பிடித்து கொண்டார்.சினிமாவில் கிடைத்த ரோல்களில் நடித்து வந்தார். இந் நிலையில் மலேசியாவைச் சேர்ந்த சுரேஷ் குமார் என்பவருக்கும், இந்துவுக்கும் காதல் ஏற்பட்டது. இந்தக் காதல் தற்போதுகல்யாணத்தில் முடிந்துள்ளது. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் கடந்த 11ம் தேதி இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இருவரும் எந்த அறிவிப்புமின்றி திடீரென்று திருமணம் செய்து கொண்டுள்ளனர்.சுரேஷ் மலேசியாவில் செல்போன் நிறுவனத்தில் அதிகாரியாக உள்ளார்.இரு வீட்டாரும், நெருங்கிய உறவினர்களும் மட்டும் இந்தக் கல்யாணத்தில் கலந்து கொண்டனர். திருமணத்தை முடித்துக்கொண்ட இந்துவின் திருமண வரவேற்பு சென்னை சவேரா ஹோட்டலில் நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. இந் நிகழ்ச்சியில் சினிமா நட்சத்திரங்கள் உள்பட இந்துவின் தோழிகள், சின்ன திரை நடிகர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

Subscribe to Oneindia Tamil

குட்டி குட்டி ரோல்களிலேயே நடித்து வந்த நடிகை இந்து, திடீரென மலேசியாவைச் சேர்ந்த வாலிபரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகி விட்டார்.

காதல் கோட்டையில் தேவயானியின் தோழியாக, கண்ணெதிரே தோன்றினாள் படத்தில் சிம்ரனின் அக்காவாக, மிலிட்டரியில்சத்யராஜின் தங்கையாக கிட்டத்தட்ட 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் இந்து.

குடும்பப் பாங்கான தோற்றத்தில் இருப்பதால் கடைசி வரை கதாநாயகி வாய்ப்பு கிடைக்காமல் குட்டி குட்டி ரோல்களிலேயேநடித்து வந்தார் இந்து. சமீப காலமாக அவருக்கு பட வாய்ப்புகள் சரி வர இல்லை. பிறகு இவருக்கு சினிமா வாய்ப்புகள் குறையதொடங்கியதும், சின்ன திரை பக்கம் ஒதுங்கி கொண்டு அங்கு ஒரு நிரந்தரமான இடத்தை பிடித்து கொண்டார்.

சினிமாவில் கிடைத்த ரோல்களில் நடித்து வந்தார்.

இந் நிலையில் மலேசியாவைச் சேர்ந்த சுரேஷ் குமார் என்பவருக்கும், இந்துவுக்கும் காதல் ஏற்பட்டது. இந்தக் காதல் தற்போதுகல்யாணத்தில் முடிந்துள்ளது. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் கடந்த 11ம் தேதி இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இருவரும் எந்த அறிவிப்புமின்றி திடீரென்று திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

சுரேஷ் மலேசியாவில் செல்போன் நிறுவனத்தில் அதிகாரியாக உள்ளார்.

இரு வீட்டாரும், நெருங்கிய உறவினர்களும் மட்டும் இந்தக் கல்யாணத்தில் கலந்து கொண்டனர். திருமணத்தை முடித்துக்கொண்ட இந்துவின் திருமண வரவேற்பு சென்னை சவேரா ஹோட்டலில் நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது.

இந் நிகழ்ச்சியில் சினிமா நட்சத்திரங்கள் உள்பட இந்துவின் தோழிகள், சின்ன திரை நடிகர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.


Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil