Poornima - பூர்ணிமாவுடன் பிக்பாஸ் வீட்டில் ஒழுங்காக பேசாததற்கு இதுதான் காரணம்.. இந்துஜா ஓபன் டாக்
சென்னை: Poornima (பூர்ணிமா) பிக்பாஸ் வீட்டில் பூர்ணிமாவுடன் ஒழுங்காக பேசாததற்கான காரணத்தை நடிகை இந்துஜா தெரிவித்திருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கி நடந்துவருகிறது. ஏறத்தாழ 50 நாட்களை கடந்திருக்கும் நிகழ்ச்சியில் நாளொரு பஞ்சாயத்து நடந்துகொண்டிருக்கிறது. பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்ட், தானாக வெளியேறிய பவா செல்லதுரை போக ஜோவிகா, வினுஷா, யுகேந்திரன், அன்னபாரதி, கானா பாலா, ஐஷு உள்ளிட்டோர் எவிக்ட் செய்யப்பட்டனர்.

வைல்ட் கார் எண்ட்ரி: ஏற்கனவே எவிக்ட் செய்யப்பட்ட விஜய் வர்மா, அனன்யா ஆகியோர் வைல்ட் கார்ட் மூலம் மீண்டும் வீட்டுக்குள் நுழைந்திருக்கின்றனர். பிரதீப் ஆண்டனி இருந்தவரை கலை கட்டிய நிகழ்ச்சி அவரது வெளியேற்றத்துக்கு பிறகு சுவாரசியமாக இருக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் ஓரளவு சுவாரசியமாகவே போட்டியாளர்கள் நிகழ்ச்சியை நகர்த்தி செல்கிறார்கள்.
சொருகிடுவேன்: உச்சக்கட்டமாக நிக்சன் சில நாட்களுக்கு முன்பு அர்ச்சனாவை சொருகிடுவேன் என்று கூறினார். அது மிகப்பெரிய எதிர்ப்பை சந்தித்தது. மேலும் பெண்கள் பாதுகாப்பை காரணம் காட்டி பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டது போல் இவரையும் வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளும் சமூக வலைதளங்களில் எழுந்தன.
கமல் மீது விமர்சனம்: கடந்த சனிக்கிழமை இதுபற்றி பேசிய கமல் ஹாசன் வேட்டையாடு விளையாடு ஸ்டைலில் கண்ணை காண்பித்து எங்கே சொருகுவீங்க நிக்சன் என கேட்டார். ஆனால் தனது எதிர்ப்பை காத்திரமாக பதிவு செய்யவில்லை. கெட்ட வார்த்தை பேசிய பூர்ணிமாவையும் அவர் கண்டிக்கவில்லை. ஒழுங்காக கமலை எவிக்ட் செய்யுங்கள் பிக்பாஸ் என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது.
இந்துஜா: இதற்கிடையே பார்க்கிங் பட புரோமோஷனுக்காக ஹரிஷ் கல்யாண், இந்துஜா ஆகியோர் அண்மையில் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றனர். அப்போது இந்துஜா தன்னிடம் ஒழுங்காக பேசவில்லை என பூர்ணிமா புலம்பி தள்ளினார். ஏனெனில் அவர்கள் இரண்டு பேரும் கல்லூரி தோழிகள். இந்நிலையில் எதற்காக பூர்ணிமாவிடம் ஒழுங்காக பேசவில்லை என்பது குறித்து இந்துஜா தெரிவித்திருக்கிறார்.
என்ன காரணம்?: அவர் இதுகுறித்து பேசுகையில், "பார்க்கிங் பட ப்ரோமோஷனுக்காகத்தான் பிக்பாஸுக்கு நாங்கள் சென்றோம். எங்களுக்கு பல விதிமுறைகளை சொல்லித்தான் உள்ளே அனுப்பினார்கள். அதுமட்டுமின்றி யாரும் யாருக்கும் ஃபேவரைட் செய்யாதீர்கள் என வீட்டுக்குள் நானே சொல்லியிருப்பேன். நானும் பூர்ணிமாவும் கல்லூரி தோழிகள்தான். ஆனாலும் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறைதான் நாங்கள் பேசிக்கொள்வோம். அவர் நல்ல பெண். நன்றாக விளையாடிவருகிறார். சில விஷயங்களை மட்டும் மாற்றிக்கொண்டால் அவர் பெரிய அளவில் வருவார்" என்றார்.


Click it and Unblock the Notifications











