மஞ்சள் மகிமை.. இந்த டிரெஸ்சுக்கு என்னங்க பேரு? வைரலாகும் இனியாவின் வேற லெவல் போட்டோஷூட் போட்டோஸ்!

By

சென்னை: நடிகை இனியாவின் புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

விமல் நடிப்பில் வெளியான 'வாகை சூடவா' படத்தில் ஹீரோயினாக நடித்தவர், இனியா.

களவாணி படத்துக்குப் பிறகு சற்குணம் இயக்கிய இந்தப் படம், கடந்த 2011 ஆம் ஆண்டு

வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

மெளனகுரு

மெளனகுரு

இதில் பாக்யராஜ், தம்பி ராமையா, பொன்வண்ணன் உள்பட பலர் நடித்திருந்தனர். இதில் இனியாவின் நடிப்பு பேசப்பட்டது. இதையடுத்து மெளனகுரு, கண்பேசும் வார்த்தைகள், புலிவால் உள்பட பல படங்களில் நடித்தார். மலையாள நடிகையான இனியா, தமிழில் பாடகசாலை என்ற படம் மூலம் அறிமுகமானார்.

யுத்தம் செய்

யுத்தம் செய்

அந்தப் படம் கவனிக்கப்படவில்லை. அடுத்து மிஷ்கினின் யுத்தம் செய் படத்தில் சின்ன கேரக்டரில் நடித்திருந்தார். பின்னர் ஒரு பாடலுக்கு ஆடத் தொடங்கினார். ஆர்.கண்ணன் இயக்கிய ஒரு ஊர்ல ரெண்டு ராஜா உள்பட சில படங்களில் ஒரு பாடலுக்கு ஆடினார். இதில் சில படங்களில் அவர் நடனம் வரவேற்பைப் பெற்றன.

டிவி சீரியல்

டிவி சீரியல்

இருந்தாலும் பெரிய படங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் தமிழ், மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வரும் அவர், டிவி சீரியல் பக்கம் கவனத்தை திருப்பியிருக்கிறார். சன் டிவியில் வெளியாகும் கண்ணான கண்ணே என்ற டிவி தொடரில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறார்.

போட்டோஷூட்

போட்டோஷூட்

சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். அடிக்கடி தனது இன்ஸ்டாவின் புகைப்படங்களை பதிவு செய்துவருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் மூணாறில் பாறையில் படுத்தபடி அவர் வெளியிட்டு இருந்த புகைப்படங்கள் வைரலாயின. இந்நிலையில் இப்போது புதிய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பாரம்பரிய நகைகள்

பாரம்பரிய நகைகள்

அந்தப் புகைப்படங்களில் பாரம்பரிய நகைகளில் நச்சென்று இருக்கிறார் இனியா. மஞ்சள் மற்றும் சிவப்பு நிற உடையணிந்துள்ள இனியாவின் அழகை பலர் ஆஹோ, ஓஹோ என பாராட்டியுள்ளனர். இந்த கான்செப்டே புதுசா இருக்கே என்று சிலர் ஆச்சரியமாகக் கூறியுள்ளனர்.

என்னங்க பேரு?

என்னங்க பேரு?

நடனம் ஆடுவது போல சில ஸ்டில்களை அவர் எடுத்துள்ள அவர் அதையும் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் மற்றும் கமென்ட்ஸ் கிடைத்துள்ளன. ஒருவர், இந்த உடைகளுக்கு என்னங்க பேரு என்று ஒரு நெட்டிசன் கேட்டுள்ளார். ஒவ்வொரு போட்டோஸும் அருமையாக உள்ளது என்று கூறியுள்ள பலர் அவரை அழகை வியந்துள்ளனர்.

டயட்டை தொடரணும்

டயட்டை தொடரணும்

ஆச்சரியமே இல்லை. அழகான நடிகைகள் பற்றி ஏன் அடிக்க கிசுகிக்கள் வருதுன்னு இப்பதாம் புரியுது என்று மற்றொருவர் கூறியுள்ளார். நீங்க இன்னும் நல்ல டயட்டை தொடரணும் என்று சிலர் அட்வைஸ் செய்துள்ளனர். அப்படியே உங்க பிகினி போட்டோவையும் போடுங்களேன் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X