திரைத் துளி
நடிகை குட்டி பத்மினிக்கு எதிர்பார்த்தது போல திங்கள்கிழமை பெண் குழந்தை பிறந்தது.
குழந்தையும், தெய்வமும் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் குட்டி பத்மினி. 150-க்கும்மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது டிவி சீரியல்கள் எடுத்து வருகிறார். அதில் குறிப்பிடத்தக்கது சன்டிவியில் வரும் கிருஷ்ணதாசி. இவரது கணவர் பிரபு நேபால். இவர்களுக்கு கீர்த்தனா என்ற பெண்ணும்,இன்னொரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில், 45 வயதாகும் குட்டி பத்மினி மீண்டும் கர்ப்பமானார். அவருக்குப் பெண் குழந்தை பிறக்கும் என்றுடாக்டர்கள் தெரிவித்திருந்தனர். அதன்படி திங்கள்கிழமை அவருக்கு சென்னையிலுள்ள தனியார்மருத்துவமனையொன்றில் குழந்தை பிறந்தது.
குறிப்பிட்ட நாளுக்கும் மேல் குழந்தை பிறக்காததால், ஆபரஷேன் மூலம் குழந்தை எடுக்கப்பட்டது. தாயும் சேயும்நலம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











