பிட்னசில் கலக்கும் சூர்யாவிற்கு பிடித்த உணவு எது தெரியுமா.. வெளியான தகவல்!

சென்னை : நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த வெற்றிகள் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

தற்போது சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தின் சூட்டிங்கில் மும்முரமாக பங்கேற்றுள்ளார் சூர்யா.

இந்தப் படத்தின் டைட்டில் உள்ளிட்ட அப்டேட்களை கேட்டு ரசிகர்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் முற்றுகையிட்டு வருகின்றனர்.

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா இந்திய அளவில் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்குரிய நடிகராக மாறியுள்ளார். அவரது சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் மற்றும் விக்ரம் ஆகிய படங்கள் அவரை அதிகமான ரசிகர்களிடம் கொண்டு சேர்த்துள்ளது. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசத்தை காட்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார் சூர்யா.

சூர்யா 42 படம்

சூர்யா 42 படம்

இந்நிலையில் தற்போது இயக்குநர் சிவா டைரக்ஷனில் சூர்யா 42 படத்தில் இணைந்து நடித்து வருகிறார் சூர்யா. இந்தப் படத்தில் அவருக்கு பாலிவுட் நடிகை திஷா பட்டானி ஜோடியாகியுள்ள நிலையில், கோவா, சென்னை உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ரசிகர்களை கவர்ந்த மோஷன் போஸ்டர்

ரசிகர்களை கவர்ந்த மோஷன் போஸ்டர்

முன்னதாக படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால் படத்தின் டைட்டில் உள்ளிட்ட எதுவும் இதுவரை வெளியாகாத நிலையில், இந்தப் படத்தின் அப்டேட்களை கேட்டு ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் முற்றுகையிட்டு வருகின்றனர்.

வரலாற்று படத்தில் சூர்யா

வரலாற்று படத்தில் சூர்யா

இதுவரை கமர்ஷியல் அம்சங்களை அதிகமாக கொண்ட படங்களை மட்டுமே இயக்கிவந்த இயக்குநர் சிவா, இந்தப் படத்தில் வரலாற்று தளத்தை கையில் எடுத்துள்ளார். இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. தொடர்ந்து இந்தப் படம் மற்றும் நடிகர் சூர்யா ட்விட்டர் ட்ரெண்டிங்கி உள்ளனர்.

சூர்யாவிற்கு பிடித்த உணவுகள்

சூர்யாவிற்கு பிடித்த உணவுகள்

இந்நிலையில் தொடர்ந்து பிட்னசில் கவனத்துடன் செயல்பட்டு வரும் நடிகர் சூர்யாவிற்கு பிடித்தமான உணவுகள் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. அவர் எப்போதுமே தயிர்சாதம், தோசை போன்ற உணவுகளைத்தான் அதிகமாக விரும்பி உண்பாராம்.

வாடிவாசல் படத்தில் இணையும் சூர்யா

வாடிவாசல் படத்தில் இணையும் சூர்யா

சூர்யா 42 படத்தில் நடித்துவரும் சூர்யா, அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் இணையவுள்ளார். இந்தப் படம் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து 60களில் நடைபெறும் கதைக்களத்தை மையமாக கொண்டது என்று வெற்றிமாறன் முன்னதாக தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X