அப்போ அது உண்மைதானா.. அமலா பாலின் 2வது திருமணம் குறித்த தகவல் பொய்.. பரபரக்கும் நீதிமன்ற உத்தரவு!

சென்னை: நடிகை அமலா பாலின் இரண்டாவது திருமணம் குறித்த தகவல் பொய் என்பது உறுதியாகியுள்ளது.

நடிகை அமலா பால் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டார்.

இயக்குநர் ஏஎல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை அமலா பால், சிறிது காலம் படங்களில் நடிக்காமல் இருந்தார். பின்னர் அம்மா கணக்கு படத்தின் மூலம் மீண்டும் அடுத்த ரவுண்டை தொடங்கினார்

பெரும் சர்ச்சை

பெரும் சர்ச்சை

இதனால் ஏற்பட்ட மனக்கசப்பால் கணவன் மனைவி இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்த வந்தார் அமலா பால். தமிழில் கடைசியாக ஆடை என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தில் அவர் நிர்வாணமாக நடித்ததால் பெரும் சர்ச்சைக்கு ஆளானார்.

வெப் சீரிஸில் ஒப்பந்தம்

வெப் சீரிஸில் ஒப்பந்தம்

நடிகை அமலா பால் ஆடை படத்தில் நடித்ததில் இருந்தே அடிக்கடி செய்திகளில் அடிபட்டு வருகிறார். ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்ததால் பல படங்களில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு தமிழில் பட வாய்ப்புகள் இன்றி உள்ளார். பின்னர் வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தமானார்.

ரகசிய திருமணம்

ரகசிய திருமணம்

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. மும்பையை சேர்ந்த பாடகர் பாவ்னிந்தர் சிங்கை நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த அமலா பால் அவரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது.

நீக்கப்பட்ட போட்டோக்கள்

நீக்கப்பட்ட போட்டோக்கள்

பாவ்னிந்தர் சிங் அமலா பாலுடனான திருமண போட்டோக்களை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். ஆனாலும் அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் அந்த போட்டோக்களை நீக்கினார். இருப்பினும் அந்த போட்டோக்கள் தீயாய் பரவியது. ரசிகர்களும் திருமண வாழ்த்துக்களை கூறினர்.

போட்டோவால் பிரச்சனை?

போட்டோவால் பிரச்சனை?

அமலா பாலின் அனுமதியில்லாமல் போட்டோக்கள் ஷேர் செய்யப்பட்டதால், அவற்றை பாவ்னிந்தர் நீக்கியதாக கூறப்பட்டது. தங்களின் திருமண போட்டோக்களை தன்னுடைய அனுமதி இல்லாமல் பாவ்னிந்தர் சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதற்கு ஏற்றார் போலவே ஃபீலிங்ஸ் போட்டோக்களையும் கேப்ஷன்களையும் வெளியிட்டு வந்தார். இருப்பினும் இரண்டாவது திருமணம் குறித்து அமலா பாலோ அல்லது பாவ்னிந்தர் சிங்கோ எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

அமலா பால் தொடர்ந்த வழக்கு

அமலா பால் தொடர்ந்த வழக்கு

இந்நிலையில் அமலா பால் தொடர்ந்த வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கும் அனுமதி ரசிகர்களை உற்று நோக்க வைத்துள்ளது. அதாவது, நடிகை அமலாபால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

சிவில் அவதூறு வழக்கு

சிவில் அவதூறு வழக்கு

அந்த மனுவில் தனது முன்னாள் நண்பர் பாவ்னிந்தர் சிங் தன்னுடன் எடுத்த புகைப்படங்களையும் தனக்கும் அவருக்கும் திருமணம் ஆகிவிட்டதாக கூறி வெளியிட்ட புகைப்படங்களையும் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் மேலும் அவர் மீது சிவில் அவதூறு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.

இரண்டாவது திருமணம் பொய்

இரண்டாவது திருமணம் பொய்

அமலா பாலின் இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சிவில் அவதூறு வழக்கு தொடர அவருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை பார்த்த நெட்டிசன்கள், அப்போ ரெண்டாவது கல்யாணம் என்று பரவிய தகவல் உண்மையிலேயே பொய்தானா என அதிர்ச்சியில் உள்ளனர்.

Recommended Video

ஆண் நண்பருடன் கடற்கரையில்.. ஓடி பிடித்து.. கட்டி உருண்டு.. விளையாடிய அமலா பால்.. வைரலாகும் வீடியோ!
யாரை காதலிக்கிறார்?

யாரை காதலிக்கிறார்?

அதேநேரத்தில், நண்பரான பாவ்னிந்தர் சிங் ஏன் திருமணம் ஆனதாக போட்டோக்களை வெளியிட வேண்டும்? அதற்கு என்ன காரணம் என்றும், அமலா பால் காதலிப்பதாக கூறிய நபர் யார் என்றும் கேட்டு வருகின்றனர். ஏற்கனவே அமலா பால், தனது காதலருடன் சேர்ந்து வாழ்வதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X