வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தின் கதை குறித்த சுவாரசிய தகவல்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தின் கதை குறித்த சுவாரசிய தகவலை தெரிவித்துள்ளார் பிகே.
Recommended Video
தமிழ் சினிமாவில் அரங்கேறும் சுவாரசிய தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸிலும் பல்வேறு சுவாரசிய தகவல்களை வழங்கியுள்ளார்.

அதன்படி வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தின் கதை மறைந்த கவிஞர் நா முத்துக்குமாரின் கவிதையில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் இந்தப் படத்தின் ஷுட்டிங் சத்தியமங்களம் வனப்பகுதியில் நடைபெற உள்ளதாகவும் கூறியுள்ளார்.
கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் சலார் படம் தெலுங்கு தமிழ் கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் உருவாகவுள்ளதாகவும் கூறியுள்ளார் பிகே. மேலும்
தனுஷ் 43 படத்தை கார்த்திக் நரேன் இயக்கவுள்ளதாகவும் பிகே தெரிவித்துள்ளார்.
இதேபோல் சந்தானம் நடிக்கும் படத்தில் பாரிஸ் ஜெயராஜ் படம் குறித்த அப்டேட் மற்றும் எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் லாபம் படம் குறித்த அசத்தல் அப்டேட்டையும் இன்றைய டாப் 5 பீட்ஸில் வழங்கியுள்ளார் பிகே.


Click it and Unblock the Notifications











