Rajini - ரஜினிக்கு BMW.. இதுதான் காரணமா?.. கலாநிதி சும்மா ஒன்னும் கார் கொடுக்கல.. பலே கில்லாடி
சென்னை: Rajini (ரஜினி) ரஜினிக்கு கலாநிதி மாறன் பிஎம்டபிள்யூ கார் கொடுத்ததற்கான பின்னணி குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
ரஜினிகாந்த் கடந்த சில வருடங்களாகவே ஒரு ஹிட்டுக்காக காத்திருந்தார். வரிசையாக அவரது மூன்று படங்கள் தடுமாறியதால் சூப்பர் ஸ்டார் நாற்காலி ஆட்டம் கண்டதாக குரல்கள் எழுந்தன. மேலும் விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றும் பேச ஆரம்பித்தனர். இப்படிப்பட்ட சூழலில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்தார் ரஜினி. கடந்த பத்தாம் தேதி படம் வெளியானது.

மெகா ஹிட்: படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதுவரை ஜெயிலர் உலகம் முழுவதும் 600 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. மேலும் இந்தப் படத்தின் மூலம் ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார் ஆகிய இரண்டு பேருமே கம்பேக் கொடுத்துவிட்டதாகவும் அவர்களது ரசிகர்கள் மகிழ்ச்சியோடு தெரிவித்துவருகின்றனர்.
ரஜினிக்கு பரிசு: ஜெயிலர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு நேற்று ரஜினிகாந்த்தை சந்தித்தார் சன் பிக்சர்ஸின் நிறுவனரும், தயாரிப்பாளருமான கலாநிதி மாறன். அப்போது ஒரு செக்கை ரஜினிக்கு கொடுத்தார். அந்த செக்கில் ஜெயிலர் படத்தின் லாபத்திலிருந்து ரஜினிக்கு சேர வேண்டிய நூறு கோடி ரூபாய் இருந்ததாக நேற்றிலிருந்து தகவல்கள் வெளியாகின. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.
கார் பரிசு: நேற்று இரவுவரை ரஜினிக்கு கலாநிதி மாறன் செக் மட்டும்தான் கொடுத்தார் என்று அனைவரும் நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் செக் கொடுத்த கையோடு இன்னொரு சர்ப்ரைஸும் வழங்கியிருக்கிறார் அவர். அதன்படி இரண்டு பிஎம்டபிள்யூ கார்களை ரஜினியிடம் காண்பித்து எது வேண்டுமோ எடுத்துக்கொள்ள சொன்னார். ரஜினியும் அமர்ந்து பார்த்து BMW X7 காரை எடுத்துக்கொண்டார். அதுதொடர்பான வீடியோ இன்று வெளியாகி படு ட்ரெண்டாகியுள்ளது.
என்ன காரணம்?: இந்நிலையில் ரஜினிக்கு கலாநிதி மாறன் செக்கையும் கொடுத்து காரையும் பரிசாக கொடுத்தற்கான பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதன்படி ரஜினிகாந்த் அடுத்ததாக ஞானவேலு இயக்கத்தில் லைகா தயாரிப்பில் நடிக்கிறார். அதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படம் மிகப்பெரிய வசூலை எடுக்கும் என இப்போதே கணிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.
அதன் காரணமாக அந்தப் படத்தை தயாரிப்பதற்கு பல நிறுவனங்கள் போட்டிப்போட்டு வருகின்றன. அந்த ரேஸில் சன் பிக்சர்ஸும் இருக்கிறதாம். இப்படிப்பட்ட சூழலில் ஜெயிலர் படம் மெகா ஹிட்டாகியுள்ளது. இதனால் அனைவருமே ஹேப்பி மூடில்தான் இருக்கிறார்கள். இந்த சூழலை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கலாநிதி ரஜினிக்கு ஜெயிலர் லாபத்தில் பங்கு, பிடித்த கார் பரிசு என அள்ளி கொடுத்து ரஜினி - லோகேஷ் கனகராஜ் படத்தை லாக் செய்ய இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதையெலாம் வைத்து பார்க்கையில் ரஜினி 171ஐ சன் பிக்சர்ஸ் 99 சதவீதம் உறுதி செய்துவிட்டதாகவே திரைத்துறையினர் கணித்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











