Vishal - மேலிடத்திடமே வாயை கொடுத்து வாங்கிக்கட்டிய விஷால்?.. இதெல்லாம் தேவையா?.. ரசிகர்கள் கேள்வி

சென்னை: Vishal (விஷால்) உதயநிதிக்கும் விஷாலுக்கும் எழுந்த மோதல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழில் பல படங்களில் நடித்திருக்கும் விஷால் கடைசியாக ஒரு ஹிட் கொடுத்து பல வருடங்கள் ஆகிவிட்டன. இதன் காரணமாக ஒரே ஒரு ஹிட் கொடுத்துவிட மாட்டோமா என்று ஏங்காத குறையாக இருக்கிறார். கடைசியாக அவர் நடித்த லத்தி படமும் படுதோல்வியை சந்தித்தது. இந்தச் சூழலில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்திருக்கிறார் விஷால்.

 Information about the conflict between Udhayanidhi and Vishal has come out

மார்க் ஆண்டனி: இந்தப் படத்தில் விஷாலுடன் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், ரிது வர்மா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். டைம் ட்ராவலை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியிருப்பது ட்ரெய்லரை பார்க்கும்போது தெரிகிறது. செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்தப் படமாவது ஹிட் படமாக அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார் அவர்.

தொடர் ஹிட்டுகள்: தற்போது ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருக்கும் விஷால் தான் அறிமுகமான புதிதில் தொடர்ந்து ஹிட்டுகளை கொடுத்தவர். செல்லமே, திமிரு, சண்டக்கோழி, தாமிரபரணி என அவர் நடித்த படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. இதனால் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் பெரிய ரவுண்டு வருவார் என கணிக்கப்பட்டது. அதேபோல்தான் வந்துகொண்டும் இருந்தார். ஆனால் இடையில் ஏற்பட்ட சறுக்கலிலிருந்து இன்னும் அவர் எழவே இல்லை.

சண்டக்கோழி: அவரது கரியரிலேயே வ சண்டக்கோழி படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. அந்தப் படத்தில் விஜய்தான் முதலில் நடிக்கவிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தில் விஷாலின் நடிப்பை பார்த்த பலரும் மிகப்பெரிய கமர்ஷியல் ஹீரொவோக வலம் வருவார் என ஆரூடம் கூறினார். அதேபோல்தான் அவரும் வலம் வர ஆரம்பித்தார்.

விஷால் Vs உதயநிதி: இந்தச் சூழலில் விஷாலுக்கும் உதயநிதிக்கும் சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகத்தை வைத்து மோதல் எழுந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. அந்தத் தகவலில், சண்டக்கோழி 2 படத்தை தயாரிக்க உதயநிதி ஸ்டாலின் ரொம்பவே ஆசைப்பட்டாராம். அதற்கு விஷால், லிங்குசாமி உள்ளிட்டோரும் ஒத்துக்கொண்டிருந்திருக்கின்றனர். அப்போது சம்பள பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது.

சம்பளத்தை குறையுங்கள்: அந்த பேச்சுவார்த்தையின்போது லிங்குசாமிக்கென்று ஒரு சம்பளத்தை ஃபிக்ஸ் செய்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். அப்போது குறுக்கிட்ட விஷால் எதற்காக அவருக்கு அவ்வளவு சம்பளம் அதை குறையுங்கள் என்று சொன்னதாகவும்; அதற்உ உதயநிதியோ உனக்கு சம்பளம் வேண்டுமென்றால் அதிகம் வாங்கிக்கொள் அவர் சம்பளத்தை ஏன் குறைக்க சொல்ற என்று கேட்டதாகவும்; அதில் முட்டிக்கொண்டதால் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் சண்டக்கோழி 2 ட்ராப் ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து விஷால் தயாரிப்பில் அந்தப் படம் வெளியாகி தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X