கூலி படத்தின் கதை இதுவா?.. பழைய டெய்லரா லோகேஷ் கனகராஜ்?.. கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் இப்போது கூலி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். பெரிய எதிர்பார்ப்பை சந்தித்திருக்கும் இப்படம் 1000 கோடி ரூபாய் வசூல் செய்யும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் இருக்கிறது. படத்தின் வியாபாரமும் சிறப்பாகவே இருக்கிறது என திரைத்துறையினர் கூற ஆரம்பித்திருக்கிறார். இந்நிலையில் கூலி படத்தின் கதை இதுதான் என்ற ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

கோலிவுட்டில் இப்போது அதிக எதிர்பார்ப்பை சந்தித்திருக்கும் படமாக அமைந்திருக்கிறது கூலி. லோகேஷ் கனகராஜின் இயக்கம், லோகேஷ் கனகராஜுடன் ரஜினி முதன்முறையாக இணைந்திருக்கிறார் என ஏகப்பட்ட ஹைப்புகள் படத்துக்கு இருக்கின்றன. ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்தப் படமானது ரிலீஸாகவிருக்கிறது. நிச்சயமாக இப்படம் கோலிவுட்டில் பல சாதனைகளை படைக்கும் என்று இப்போதே ஆரூடங்கள் கூறப்பட்டுவருகின்றன.

ட்ரெய்லர் எப்போது?: படத்தின் ஷூட்டிங் முடிந்து இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்துவருகின்றன. படத்திலிருந்து இதுவரை இரண்டு சிங்கிள்கள் வெளியாகியிருக்கின்றன. இரண்டு பாடல்களுமே சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்பதுதான் ரசிகர்களின் மனநிலையாக இருக்கிறது. முக்கியமாக அனிருத் வழக்கம்போல் இந்தப் படத்திலும் தனது முந்தைய பாடல்களின் இசையை பயன்படுத்தியிருப்பாரோ என்று சிங்கிள்களை கேட்டவர்கள் கூறிவருகிறர்கள். ட்ரெய்லரானது அடுத்த மாதம் முதல் வாரத்தில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Information about the plot of Rajinikanth s Coolie has been revealed
Photo Credit:

50 கோடி ரூபாய் சம்பளம்: லோகேஷ் இதற்கு முன்னதாக இயக்கிய லியோ வசூல் ரீதியாக 600 கோடி ரூபாயை தொட்டுவிட்டது என்று சொல்லப்பட்டிருந்தாலும்; விமர்சன ரீதியாக டேமேஜை சந்தித்தது. இதனால் லோகேஷின் கரியரில் லியோ தோல்வி படம் என்றே கருதப்படுகிறது. இருப்பினும் 600 கோடி ரூபாயை அந்தப் படம் வசூலித்ததால் கூலி படத்தில் அவருக்கு 50 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.

இன்னொரு தளபதி?: படத்தின் டப்பிங் பணிகளையும் ரஜினிகாந்த் முடித்துவிட்டார். டப்பிங்கின்போது படத்தை பார்த்த ரஜினியோ, உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்து லோகேஷை கட்டியணைத்து எனக்கு இன்னொரு தளபதியை கொடுத்திருக்கிறீர்கள் என்று சொன்னதாக இயக்குநரே ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். இதனால் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்துவருகிறார்கள்.

1000 கோடி ரூபாய் அடிக்குமா?: இதெல்லாம் ஒருபக்கம் இருக்க கூலி திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூல் செய்யப்போகும் முதல் தமிழ் படமாக அமையும் என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால் லோகேஷோ, "இந்தப் படம் 1000 கோடி ரூபாயை வசூலிக்குமா என்பது எனக்கு தெரியாது. ரசிகர்கள் கொடுக்கும் 150 ரூபாய்க்கு ஏற்ற படமாக அமைய வேண்டுமென நினைத்து உழைத்திருக்கிறோம்" என சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

இதுதான் கதையா?: இப்படி பல ஹைப்புகளை பெற்றிருக்கும் இப்படத்தின் கதை குறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி கதையில் பெரிய கேங்ஸ்டராக இருக்கும் ரஜினிகாந்த்; தன்னுடைய தவறுகளை சரி செய்து வாழ்வதற்காக எதிரிகளை பழிவாங்குவதுதான் ஒன்லைன் என்று சொல்லப்படுகிறது. இதனை பார்த்த ரசிகர்களோ, இது என்ன பழைய கதையாக இருக்கிறதே; இதை வைத்து எப்படி 1000 கோடி ரூபாய் வசூலிக்க முடியும்; பழைய டெய்லர்தானோ என்று கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் மேக்கிங்கில் லோகி கலக்கிவிடுவார் என்பது ரஜினி ரசிகர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X