விஜய்யின் க்ளோஸ் பிரண்ட்ஸ் இவங்க தானா..? ரசிகர்களே நம்ப முடியாத ஆச்சரியமான தகவல்!

சென்னை: தமிழ்த் திரையுலகில் இன்றைய டாப் மோஸ்ட் ஹீரோவாக வலம் வருவது விஜய் தான்.

வாரிசு படத்தைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோவில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று தந்து நண்பர் அஜித்தின் தந்தை மறைவுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார்.

இந்நிலையில், விஜய்யின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருக்கும் நடிகர்கள், இயக்குநர்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

 நட்புக்கு மரியாதை

நட்புக்கு மரியாதை

கோலிவுட்டின் முன்னணி ஹீரோவாக வலம் வரும் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் இதுவரை காஷ்மீரில் நடைபெற்று வந்தது. அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு நேற்று சென்னை திரும்பிய நிலையில், அஜித்தின் அப்பா மறைவு செய்திக் கேட்டு உடனடியாக நேரில் சென்று ஆறுதல் கூறினார் விஜய். அஜித் - விஜய் இருவரையும் முன்னிலைப்படுத்தி ரசிகர்கள் சண்டையிட்டு வந்தாலும், அவர்கள் எப்போதுமே நல்ல நண்பர்களாக இருப்பதற்கு நேற்றைய நிகழ்வே நல்ல உதாரணம்.

 விஜய்யின் க்ளோஸ் பிரண்ட்ஸ்

விஜய்யின் க்ளோஸ் பிரண்ட்ஸ்

விஜய்யும் அஜித்தும் பொதுஇடங்களில் சந்திக்கும் போது நல்ல நண்பர்களாக பழகிவருவதை இதற்கு முன்பும் பார்க்க முடிந்தது. இந்நிலையில், விஜய்யின் நட்பு வட்டத்தில் மிக நெருக்கமாக இருக்கும் திரையுலகினர் குறித்து தகவல் சில தகவல்கள் கிடைத்துள்ளன. ஒருமுறை விஜய் டிவி நிகழ்ச்சியில் விஜய் தனது கல்லூரி நண்பர்களுடன் கலந்துகொண்டார். அதில் சீரியல் நடிகர் சஞ்சீவ் உள்ளிட்ட மேலும் சிலரை விஜய் தனது நண்பர்கள் என அறிமுகப்படுத்தினார். இவர்களையும் கடந்து ஒரு நெருங்கிய நட்பு வட்டம் எப்போதும் விஜய்யை சுற்றியே உள்ளதாம்.

 நம்பவே முடியாத கூட்டணி

நம்பவே முடியாத கூட்டணி

இந்த நட்பு வட்டத்தில் நடிகர் சத்யராஜ்ஜின் மகனும் நடிகருமான சிபிராஜ், நடிகர்கள் ஜீவா, சாந்தனு பாக்யராஜ், ஸ்ரீமன், இயக்குநர்கள் அட்லீ, லோகேஷ், நெல்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். முக்கியமாக விஜய், சிபிராஜ், ஜீவா மூவரும் நெருங்கிய நண்பர்களாக வலம் வருவதாக சொல்லப்படுகிறது. இந்த கேங்கில் விஜய் இணைந்துவிட்டால் அங்கு செம்ம ஜாலியான அரட்டை கச்சேரி நடக்கும் என பிரபல சினிமா விமர்சகர் ஒருவர் பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

 விஜய் ரசிகர்களுக்கு ஆச்சரியம்

விஜய் ரசிகர்களுக்கு ஆச்சரியம்

விஜய்யின் நெருங்கிய நண்பர்கள் குறித்த தகவல்களை அறிந்த அவரது ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். எப்போதும் பார்க்க சைலண்டாகவே இருக்கும் விஜய் நண்பர்களுடன் சேர்ந்துவிட்டால் வேற லெவலில் வைப் கொடுப்பாராம். அதேபோல், நண்பர்களுக்கு எதாவது என்றால் உடனடியாக தொடர்புகொண்டு விசாரிப்பதிலும் விஜய் தயங்கவே மாட்டாராம். படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்தாலும் அடிக்கடி நண்பர்களை பார்த்து அரட்டை அடிப்பது தான் விஜய்க்கு மிகப் பிடித்த பொழுதுப்போக்கு என சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X