Vijay - இதுதானா விஜய்யின் அரசியல் கொள்கை?.. தீயாக பரவும் தகவல் இதோ

சென்னை: Vijay (விஜய்) விஜய் கட்சி ஆரம்பித்தால் அவரது அரசியல் கொள்கை என்னவாக இருக்கும் என்பது குறித்த தகவல் இணையத்தில் பரவிவருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்திருக்கும் விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் அந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதற்கிடையே லியோ படமானது அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதால் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விரைவில் தொடங்கவிருக்கின்றன.

Information about what Vijays political policy will be if he starts

விஜய் மக்கள் இயக்கம்: விஜய் நடிப்பில் எவ்வளவு பிஸியாக இருக்கிறாரோ அதே அளவு தனது மக்கள் இயக்க செயல்பாடுகளிலும் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் மாணவ, மாணவிகளை சந்தித்தது, அனைத்து மாவட்டங்களிலும் இரவு நேர பாடசாலையை திறந்தது, ஏகப்பட்ட நலத்திட்ட உதவிகள் செய்வது என விஜய் மக்கள் இயக்கத்தினர் பம்பரமாய் சுழன்று வேலை பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

அரசியல் எண்ட்ரி?: ரொம்ப வருடங்களாகவே விஜய் மக்கள் இயக்கத்தினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டாலும் சமீப காலமாகத்தான் விஜய்யே நேரடியாக களத்தில் இறங்கியிருக்கிறார். இதன் மூலம் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி. அதற்கான விதை விதைக்கும் பணியில்தான் இப்போது ஈடுபட்டிருக்கிறார். அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் கட்சியை தொடங்கி நிச்சயம் தேர்தலில் போட்டியிடுவார் என விஜய்யின் ரசிகர்கள் நம்பிக்கையோடு இருக்கின்றனர்.

இரவு நேர பாடசாலை: விஜய் தனது அரசியலுக்கான விதையை விதைக்க ஆரம்பித்துவிட்டார் என அவரது ரசிகர்களும் முழுமூச்சாக வேலை செய்துவருகின்றனர். இதற்கிடையே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பதுதான் விஜய் நடிக்கும் கடைசி படம். அதனையடுத்து மூன்று வருடங்கள் பிரேக் எடுத்து அரசியல் வருகைக்கான பணிகளை கவனிப்பார் எனவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஆனால் அது வதந்தி என உறுதியானது.

அரசியல் கொள்கை: இந்நிலையில் விஜய் கட்சி ஆரம்பித்தால் அவரது அரசியல் கொள்கை என்னவாக இருக்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி சமூக நீதி, அனைவருக்கும் சம உரிமை, தீண்டாமை எதிர்ப்பு உள்ளிட்டவைகள்தான் அவரது கொள்கையாக இருக்கும் என கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி அவர் கட்சி ஆரம்பிக்கும்பட்சத்தில் யாருடனும் கூட்டணி வைக்காமல் தனியாகவே இருக்க வேண்டும் என அவரது ரசிகர்களில் பெரும்பாலானோர் விரும்புகின்றனர். ஆனால் இங்கு இரண்டு கட்சிகளில் ஏதேனும் ஒன்றுடன் கூட்டணி வைத்தால்தான் நிலைக்க முடியும் என்ற நிலைமை ரொம்ப நாளாகவே இருக்கிறது. எனவே அதை விஜய் மாற்றிக்காட்டுவாரா என்ற கேள்வியும் அவரது ரசிகர்களிடம் இப்போதே எழுந்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X