Lal Salaam - இந்த வயதில் இப்படி செய்கிறாரே?.. லால் சலாம் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி செய்தது தெரியுமா?
சென்னை: Lal Salaam (லால் சலாம்) ரஜினிகாந்த் லால் சலாம் ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்த செயல் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.
ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் சில வருடங்களுக்கு முன்பு திருமண உறவிலிருந்து வெளியே வந்தார். திருமண உறவிலிருந்து வெளியே வந்தாலும் அதிலேயே முடங்கிவிடாமல் தனது சினிமா குறித்த பணிகளில் ஆர்வமாக கவனம் செலுத்திவருகிறார்.

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3 படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தனுஷ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும் வசூல் ரீதியாக சரியாக போகவில்லை. இதனையடுத்து வை ராஜா வை படத்தை இயக்கினார். கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படமும் சரியான வரவேற்பைப் பெறவில்லை.
லால் சலாம் இயக்கும் ஐஸ்வர்யா: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிதாக லால் சலாம் என்ற படத்தை இயக்கிவருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் ஷுட்டிங் திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடந்தது. லால் சலாம் படத்தின் ஹைலைட்டாக ரஜினிகாந்த் இருக்கிறார்.
மொய்தீன் பாயாக ரஜினிகாந்த்: லால் சலாமில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடிக்கிறார். மும்பையில் அவர் தாதாவாக இருப்பார் என்றும் விஷ்ணு விஷாலையும், விக்ராந்த்தையும் ஒரு பிரச்னையில் இருந்து அவர் காப்பாற்றுவது போலவும் காட்சிகள் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் படத்தில் கபில்தேவும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படம் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது.
புதுச்சேரியில் ஷூட்டிங்: மும்பையில் ரஜினிக்கான ஷூட்டிங் முடிந்ததோடு அடுத்ததாக புதுச்சேரியில் ஷூட்டிங் நடந்துவருகிறது. இந்த ஷெட்யூலிலும் ரஜினி கலந்துகொள்கிறார். விறுவிறுப்பாக படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் நடந்துவருகிறது. இந்தச் சூழலில் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியின் நடத்தையை பார்த்து அங்கிருப்பவர்கள் பெரிதும் ஆச்சரியப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
என்ன செய்தார் ரஜினிகாந்த்?: அதாவது ஒருமுறை ஷூட்டிங்கில் காலை 7 மணிக்கு ரஜினிகாந்த் வந்தாராம். ஆனால் அவருக்கான ஷாட் முடிந்தாலும் ஸ்பாட்டிலிருந்து கிளம்பாத ரஜினிகாந்த் அங்கு ஒரு நாற்காலியை போட்டு அமர்ந்து தனது மகள் இயக்கும் அழகை பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறாராம். குறிப்பாக அதிகாலை 3 மணிக்கு ஷூட்டிங் முடிந்தாலும் அவ்வப்போது கேரவனுக்குள் சென்றுவரும் ரஜினி மீண்டும் ஸ்பாட்டுக்கு வந்து அமர்ந்துகொள்கிறாராம். இதனைப் பார்த்த படக்குழுவினர் இந்த வயதிலும் எவ்வளவு டெடிகேஷனாக இருக்கிறார் என பிரமித்திருக்கிறார்களாம்.


Click it and Unblock the Notifications











