Leo Success Meet - லியோ வெற்றி விழாவில் அனிருத் பங்கேற்காததற்கு இதுதான் காரணமா..?

சென்னை: Leo Success Meet (லியோ சக்சஸ் மீட்) லியோ வெற்றி விழாவில் அனிருத் எதனால் பங்கேற்கவில்லை என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

Information has come out about why Anirudh did not participate in Leo Success Meet

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியானது. த்ரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிக்க லலிதகுமார் தயாரித்திருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். கோலிவுட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்ற படமாக லியோ இருந்தது.

சறுக்கல்?: அந்த எதிர்பார்ப்போடு ரசிகர்கள் படம் பார்க்க சென்றனர். ஆனால் விஜய் ரசிகர்களை தவிர்த்து மற்றவர்களை படம் திருப்திப்படுத்த தவறியது. விமர்சன ரீதியாக சரியாக போகாவிட்டாலும் வசூல் ரீதியாக படம் மெகா ஹிட்டாகியிருக்கிறது. இதுவரை 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

லியோ சக்சஸ் மீட்: சூழல் இப்படி இருக்க லியோ படத்தின் சக்சஸ் மீட் நேற்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமாக நடந்தது. இதில் விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய விஜய், "ஒரு காட்டுல யானை, புலி, காக்கா, கழுகு, மான் என நிறைய மிருகங்கள் இருந்துச்சு.

காட்டுக்கு ரெண்டு பேர் வேட்டைக்கு போனாங்க. ஒருத்தர் வில் அம்போட போய் முயல பிடிச்சிட்டு வந்தாரு. இன்னொருத்தர் ஈட்டியோட போயி யானைக்கு குறி வெச்சு ஒன்னும் இல்லாம வந்தாரு. இதுல யார் வெற்றியாளர்? நிச்சயமா யானைக்கு குறி வெச்சவர்தான் வெற்றியாளர். எப்பவும் பெரிய விஷயங்களுக்கே கனவு காணுங்க

ஒருத்தர்தான்: மக்கள் திலகம் என்றால் ஒருவர்தான். நடிகர் திலகம் என்றால் ஒருவர்தான். புரட்சி கலைஞர் என்றால் ஒருவர்தான். உலகநாயகன் என்றால் ஒருவர்தான். சூப்பர் ஸ்டார் என்றால் ஒருவர்தான். தல என்றால் ஒருவர்தான். நான் தளபதியாக இருக்கிறேன். மக்களாகிய நீங்கள்தான் மன்னர்கள். நீங்கள் சொல்லும் வேலையை நான் செய்வேன் என பட்டாசாக பேசினார்.

Information has come out about why Anirudh did not participate in Leo Success Meet

அனிருத் இல்லை: இப்படி லியோ படத்தின் வெற்றி விழா பல விஷயங்களால் கொண்டாடப்பட்டது. இருந்தாலும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒருவரான அனிருத் இந்த விழாவில் பங்கேற்காதது ஏன் என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் அதுகுறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அனிருத் ஜவான் படத்திற்கு இசையமைத்ததிலிருந்து இந்திய அளவில் பிரபலமான இசையமைப்பாளராக மாறிவிட்டார். அவரது கைவசம் தற்போது ஏராளமான படங்கள் இருப்பதாலும் அந்த பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்பதால் இந்த விழாவில் அவரால் கலந்த்கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X