Theatre Release: சொல்லி அடிக்க காத்திருக்கும் 4 படங்கள்.. இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்கள்!
சென்னை: மே3ந் தேதி தியேட்டரில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் தியேட்டரில் மாஸ் காட்டி வரும் நிலையில், இந்த வாரம் நான்கு திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாக உள்ளது. தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், வெளியாக இருக்கும் நான்கு படங்களில் ஒன்று நிச்சயம் வசூலை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உயிர் தமிழுக்கு: ப்ளூ சட்டை மாறன் இயக்கிய ஆன்டி இண்டியன் படத்தை தொடர்ந்து மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் உயிர் தமிழுக்கு. இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா, அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார். மேலும், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்ரமணிய சிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைப்பாளர். இத்திரைப்படம் மே 10ந் உலகம் முழுவதும் தியேட்டரில் வெளியாகி உள்ளது.

ரசவாதி: மௌனகுரு, மகாமுனி என்ற வெற்றிப்படத்தை இயக்கிய தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகராக மாறிய இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் தான் ரசவாதி. க்ரைம், ரொமான்டிக், த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள அர்ஜுன் தாஸ்,ரம்யா சுப்ரமணியம் , ரிஷிகாந்த், தான்யா,ஜிஎம் சுந்தர், சுஜித் சங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா, ரிஷிகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்தை டி.என் .ஏ இந்தப் மற்றும் சரஸ்வதி சினி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் மே 10ந் தேதி தியேட்டரில் வெளியாகி உள்ளது
இங்க நான் தான் கிங்கு: கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் காமெடி கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் இங்க நான் தான் கிங்கு. இதில் சந்தானம், பிரியாலயா, தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, பால சரவணன், முனிஷ்காந்த், மாறன், சேசு, சுவாமிநாதன், கூல் சுரேஷ், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இத்திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாக உள்ளது.
ஸ்டார்: டாடா படத்தின் வெற்றிக்குப் பிறகு கவனிக்கப்படும் நடிகராக மாறி உள்ள நடிகர் கவின் நடித்துள்ள திரைப்படம் ஸ்டார்.இந்த படத்தை நித்தம் ஒரு வானம் படத்தை தயாரித்த ரைஸ் ஈஸ்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் மே 10ந் தேதி தியேட்டரில் வெளியாகி உள்ளது. கோடை விடுமுறையில் சரியான நேரத்தில் இந்த படம் வெளியாக இருப்பதால் ஓப்பனிங் வசூல் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











