இயக்குனர் ஆன நடிகர்கள் லிஸ்ட்டில் இணைந்த மற்றொரு நடிகர்.. இனிகோ பிரபாகரை இயக்குகிறார்!

By

சென்னை: இயக்குனர் ஆன நடிகர் லிஸ்ட்டில் புதிதாக இணைந்திருக்கிறார் மற்றொரு நடிகர்.

சின்ன சின்ன வேடங்களில் நடித்து முக்கிய கேரக்டர்களில் நடிக்க தொடங்கியவர், இனிகோ பிரபாகர்.

சென்னை 28, சென்னை 28 அடுத்த பாகம், சுந்தரபாண்டியன், ஆர்.கே நகர் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

ஆர்.கே. நகர் வில்லன்

ஆர்.கே. நகர் வில்லன்

அழகர்சாமியின் குதிரை, ரம்மி, பிச்சுவாகத்தி, வீரய்யன் படங்களில் நாயகனாக நடித்திருந்தார். ஆர்.கே நகர் படத்தில் வில்லனாக நடித்திருந்தாலும் அந்தப் படத்தில் கதாநாயகனுக்கு நிகரான கேரக்டரில் நடித்திருந்தார். இவர் இப்போது ஹீரோவாக நடிக்கும் படத்தை நடிகர் ஆறு பாலா இயக்குகிறார்.

இயக்குனர் அவதாரம்

இயக்குனர் அவதாரம்

ஆறுபாலா, விஜய் சேதுபதியின் ஆரஞ்சு மிட்டாய், திரெளபதி, கடல், ஆயிரத்தில் ஒருவன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் இப்போது இயக்குனர் அவதாரம் எடுக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ஓல்ட் பேட்ரியோடிக் புரொடக்‌ஷன் தயாரிக்கிறது.

சென்னையில் படப்பிடிப்பு

சென்னையில் படப்பிடிப்பு

இனிகோ பிரபாகருடன் மூணாறு ரமேஷ், ராம்ஸ், சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

ரமேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். விக்ரம் வர்மா இசை அமைக்கிறார். பூஜையுடன் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.

ஆசை நிறைவேறியது

ஆசை நிறைவேறியது

படம் பற்றி ஆறு பாலா கூறும்போது, படம் இயக்க வேண்டும் என்றுதான் சென்னைக்கு வந்தேன். ஆரம்பத்தில் நடித்துக் கொண்டே கற்றுக்கொள்ளலாம் என பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தேன். பிறகு கவனிக்கத்தக்க கேரக்டர்களில் சில படங்களில் நடித்தேன். இப்போது என் ஆசை நிறைவேறி இருக்கிறது.

சாதகமாக இருக்கிறது

சாதகமாக இருக்கிறது

நெல்லை மாவட்டத்தில் நடக்கும் கதை இது. சட்டம் யாருக்கு சாதகமாக இருக்கிறது என்கிற லைன் தான் கதை. யதார்த்தமான படமாக இருக்கும். அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சாயல்குடி பகுதியில் தொடங்க இருக்கிறது. ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. விரைவில் முடிவு செய்துவிடுவோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X