twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆரம்பத்துல பயமாத்தான் இருந்துச்சு.. ஜாங்கோ படத்தால் மிரண்டு போன மிருணாளினி !

    |

    சென்னை :அறிவியலும், கற்பனையும் கலந்த வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமாக ஜாங்கோ திரைப்படம் வரும் வெள்ளி அன்று வெளியாக இருக்கிறது.

    Recommended Video

    Actress Mirnalini Ravi Speech | Jango movie Audio Launch | Filmibeat Tamil

    இயக்குனர் மனோ கார் த்திகேயன் இயக்கத்தில் சதீஷ் குமார், மிருணாளினி ரவி, கருணாகரன், ரமேஷ் திலக் என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படம் ஜாங்கோ.

    இயக்குனரும், தயாரிப்பாளருமான சி.வி. குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பாடல்கள் பட்டையை கிளப்பும் வரவேற்பை பெற்றுள்ளது.

    செம ஹாட் அப்டேட்... விக்ரமில் இணையும் அடுத்த 2 வில்லன்கள் இவர்கள் தான் செம ஹாட் அப்டேட்... விக்ரமில் இணையும் அடுத்த 2 வில்லன்கள் இவர்கள் தான்

     வலுவான டீம்

    வலுவான டீம்

    வாழ்க்கையில் ஒரு வினாடியை கூட வீணாக்க நினைக்காத இளைஞன் தனது கொள்கையால் குடும்ப வாழ்க்கையை இழக்கிறான். டைம்-லூப் மூலம் இழந்த வாழ்க்கையை அவன் எப்படி மீட்கிறான் எனும் கதைக்களத்தை கொண்டது ஜாங்கோ.இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கார்த்திக் கே தில்லை ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் சான் லோகேஷ் எடிட்டிங் செய்துள்ளார். ஹரீஸ், பராடி, வேலுபிரபாகரன் போன்றோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

     “ ஏ “ மற்றும் “யு”

    “ ஏ “ மற்றும் “யு”

    " கடைசீல பிரியாணி" படமும் நவம்பர் 19 வெளியாகிறது. புதுமுக இயக்குனரான நிஷாந்த் கலிதிண்டி தயாரித்து இயக்கியுள்ளார். படத்தின் வன்முறை காட்சி காரணமாக 'ஏ' சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. நிஷாந்த் களிதின்டி என்பவர் படத்தை இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க புது முகங்களை மட்டுமே வைத்து இயக்கியுள்ள படமாகும். ஜாங்கோ திரைப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

     லக் ல வந்த பொண்ணு இல்ல

    லக் ல வந்த பொண்ணு இல்ல

    நாயகியாக நடிப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார் மிருணாளினி. இந்த படம் எப்போது புக் ஆனார் என்ற விபரம் கேட்ட போது, "சூப்பர் டீலக்ஸ் படத்துக்கு அப்பறமா புக் ஆன படம் ஜாங்கோ. நல்ல போல்டா இருக்குற கேரக்டர். நியூஸ் ரிப்போட்டரா இருக்குறப்ப இவ்ளோ விஷயம் இருக்கான்னு ஆச்சரியப்பட்டுருக்கேன். அதே நேரத்துல சினிமா கத்துக்கிறதுக்கு இந்த படம் எனக்கு பெரிய வாய்ப்பு.டப்ஸ்மேஷ்ல ஈசியா பண்ணிடலாம், ஆனா நெஜத்துல பெரிய ஸ்க்ரீன்ல நடிக்கும்போது ரொம்ப பயம் இருந்துச்சு. அதே நேரத்துல நம்மள ஒன்னும் தெரியாத ஆளுன்னு நெனச்சிட கூடாதேன்னும் கவனமா இருந்தேன். போக போக நல்லா கத்துகிட்டு சிறப்பா பண்ணிருக்கேன்" என்றார் மிருணாளினி

     அது வேற இது வேறங்க

    அது வேற இது வேறங்க

    ஜாங்கோ ஷூட்டிங்-ல் இயக்குனர் மனோவின் காதில் விழும்படியே உடன் பணியாற்றிய சிலர் குறை கூறியது உண்டாம். அதையெல்லாம் காதில் வாங்காமல், கதையும் களத்தையும் கருத்தில் கொண்ட இயக்குனர் ஜாங்கோ பற்றி கூறியபோது " திரும்ப நடந்தா எப்படி இருக்கும்ங்கிறதுதான் டைம் லூப். அது ஒரே நாள் ல நடக்கிற விஷயமா இருக்கலாம். இல்ல ஒரு வாரத்துல திரும்ப திரும்ப நடக்கற விஷயமா இருக்கலாம். இல்ல ஒரு மணி நேரத்துல நடக்குற விஷயமா கூட இருக்கலாம். எப்படி வேணும்ன்னாலும் வித விதமா காட்டலாம். வெங்கட் பிரபு அனுகும் முறை வேற, நான் அனுகுற முறை வேற. ஒரு காதல் படத்த எப்படி எல்லாரும் விதம் விதமா காட்ட முடியுமோ அப்படித்தான் இதுவும். மற்ற படங்களோட இதை ஒப்பிட முடிஞ்சாலும், இதுல சொல்லபட்டுருக்க விதமும் விஷயமும் வேற மாதிரி இருக்கும்" என்றார். வரும் வெள்ளி அன்று திரைவிருந்தாக வர இருக்கும் ஜாங்கோவிற்கு, தனி ரசிகர் பட்டாளமே காத்திருக்கிறது.

    English summary
    Mirnalini Ravi About Jango Movie Experience: டப்ஸ்மேஷ்ல ஈசியா பண்ணிடலாம், ஆனா நெஜத்துல பெரிய ஸ்க்ரீன்ல நடிக்கும்போது ரொம்ப பயம் இருந்துச்சு. அதே நேரத்துல நம்மள ஒன்னும் தெரியாத ஆளுன்னு நெனச்சிட கூடாதேன்னும் கவனமா இருந்தேன். போக போக நல்லா கத்துகிட்டு சிறப்பா பண்ணிருக்கேன்” என்றார் மிருணாளினி.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X