Don't Miss!
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- News நோட்டாவில் அதிக ஓட்டு.. தேர்தல் ரத்தாகுமா? என்னங்க சொல்றீங்க.. நீங்க நம்பலைனாலும் ‘இது’ தான் நெசம்!
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தமிழில் அங்கீகாரம் கிடைக்க முதலில் ‘இதை’ கத்துக்கோ... தங்கைக்கு இனியாவின் அட்வைஸ்
தமிழை முறையாகக் கற்றுக் கொள்ள தன் தங்கைக்கு அறிவுரை கூறியுள்ளார் நடிகை இனியா.
Recommended Video
சென்னை: நடிகை இனியாவின் சகோதரி தாரா 'கிளம்பிட்டாங்கய்யா, கிளம்பிட்டாங்கய்யா' என்ற படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகம் ஆகிறார்.
ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் 'கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா'. முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்தி, திரில்லர், ஆக்ஷன், திகில் கலந்து, இயக்குநர் ரசாக் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபல பாடகரும், நடிகருமான மனோவின் மகன் ரத்தீஷ் கதாநாயகனாகவும், நடிகை இனியாவின் தங்கை தாரா கதாநாயகியாகவும் அறிமுகம் ஆகின்றனர்.
கே.பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர் ஆகிய பிரம்மாண்ட இயக்குனர்களுடன், 'பவர்ஸ்டார்' சீனிவாசன், அஸ்மிதா, விஷ்வா, கண்ணன், ராஜ், திவ்யா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீகாந்த் இசையமைத்திருக்கிறார்.
சிரிப்பு கேரண்டி:
இந்நிலையில் தனது முதல்பட அனுபவம் குறித்து தாரா கூறுகையில், "கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா' படம் பார்க்க, திரையரங்குகளுக்கு வரும் மக்கள் இரண்டரை மணி நேரம் தங்கள் கவலைகளை மறந்து மனம்விட்டு சிரிக்கலாம்.
தயக்கம் உடைந்தது:
இந்த படத்தில் நான் மன்சூர் அலிகானுக்கு மகளாக நடிக்கிறேன். அவரைப் பார்க்க முதலில் பயமாக இருந்தது. போக போக நல்ல நண்பர் ஆகிவிட்டார். நிறைய அறிவுரை சொன்னார். கூட்டத்தில் நடிக்க தயங்கினேன். என் தயக்கத்தை உடைத்தது அவர் தான்.
மறக்க முடியாத அனுபவம்:
படத்தின் இறுதிக்காட்சியில் ஹீரோவுடன் நான் ஓடவேண்டும். மரங்களில் கேமராக்கள் வைத்து எடுத்தார்கள். பாதையில் கல், குழி எல்லாம் இருக்கும். இயல்பாக இருக்க வேண்டும் என்று அப்படியே ஓடினோம். நாய் துரத்தி கூட நான் ஓடியது கிடையாது. அந்த காட்சிக்காக ஓடியது மறக்க முடியாத சம்பவம்.
இனியாவின் அட்வைஸ்:
தமிழை முறையாக கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் தமிழ் சினிமாவில் சிறப்பான அங்கீகாரம் கிடைக்கும் என என் அக்கா எனக்கு அறிவுரை கூறினார்" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.