மகனுக்கு வாயில் முத்தம் கொடுத்த ஆல்யா மானசா.. எவ்ளோ க்யூட்டான வீடியோ பாருங்க.. குவியும் கமெண்ட்ஸ்!
சென்னை: தமிழ்நாடு ரசிகர்களைப் பொறுத்தவரையில் வெள்ளித்திரைப் பிரபலமோ, சின்னத்திரை பிரபலமோ, அவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை ரொம்ப பிடித்துப்போனால், தலையில் வைத்துக் கொண்டாடுவார்கள். அதுவே, தங்களுக்கு திரையில் பிடித்துப்போன ஜோடி நிஜத்திலும் திருமணம் செய்து கொண்டால், அவர்களை ஏதோ அவர்கள் வீட்டில் ஒருவரைப் போல் சந்தோசப்பட்டுக் கொள்வார்கள். அந்த வகையில் தமிழ்நாட்டில் சின்னத்திரை மூலம் லட்சக்கணக்காண மக்களின் மனதில் இடம் பிடித்த ஜோடி என்றால் அது ஆல்யா மானசா- சஞ்சீவ் ஜோடியைச் சொல்லலாம்.
இந்நிலையில் ஆல்யா மானசா தான் நடித்துவரும் சீரியலின் படப்பிடிப்புத் தளத்திற்கு தனது மகனை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது மகனைக் கொஞ்சுவதை வீடியோவாக பதிவிட்டு, தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

சின்னத்திரை நடிகை, ஆல்யா மானசா தனக்கென அதிக ரசிகர்கள் பட்டாளம் கொண்டவர். இவர் தனது சின்னத்திரை வாழ்க்கையை டான்ஸராக தொடங்கினார். அதன் பின்னர், ஆல்யா மானசா, விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் கதாநாயகியாக நடித்தார். இந்த சீரியல் மூலம் தமிழ் நாடு முழுவதும் பிரபலமானார்.
தான் நடித்த ராஜா - ராணி சீரியலில் கதாநாயகனாக நடித்த சஞ்சய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றார் என தகவல் வெளியானதும் அவர்களது ரசிகர்களிடம் இருந்து வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருந்தது. இவர்களது திருமணத்திற்கு ஆல்யா மானசாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தாலும், சஞ்சய் பெற்றோர் க்ரீன் சிக்னல் காட்டியதால், இவர்கள் இருவருக்கும் சஞ்சய் பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

செம ஜோடி: திருமணத்திற்குப் பின்னர் குழந்தைகள், குடும்பம் என கொஞ்ச காலத்திற்கு மட்டும் சீரியலில் இருந்து மானசா ஒதுங்கி இருந்தாலும், தற்போது முழு வீச்சில் நடித்து வருகின்றார். சன் டீவியில் ஒளிபரப்பாகும் இனியா தொடரில் நடித்துக் கொண்டு இருக்கின்றர். அதேபோல் சஞ்சய், கயல் தொடரில் நடித்துக் கொண்டு உள்ளார். இன்றைக்கு டாப் 10 டிவி சீரியல்களை எடுத்துக் கொண்டால், ஆல்யா - சஞ்சய் ஜோடி நடித்து வரும் சீரியல் கட்டாயம் டாப்பில் இருக்கும்.

உதட்டில் முத்தம்: இவர்களுக்கு 2 குழந்தைகளும் இருக்கின்றார்கள். அண்மையில் கூட, ரூபாய் 1.8 கோடி செலவு செய்து ஸ்டார் ஹோட்டல் அளவிற்கு பிரமாண்டமான வீட்டினைக் கட்டி முடித்தனர். இவர்களது ஹோம் டூர் வீடியோ இணையத்தில் கலக்கிக் கொண்டு உள்ளது. இந்நிலையில், தான் நடித்து வரும் இனியா சீரியலின் படப்பிடிப்புத் தளத்திற்கு ஆல்யா மானசா தனது மகனை அழைத்துச் சென்றுள்ளார். மேலும் அங்கு கிடைத்த ஓய்வு நேரத்தில் மகனுக்கு வாயில் முத்தம் கொடுத்தும், தன்னைப் போல போஸ் கொடுக்கச் சொல்லியும் கொஞ்சிக் கொண்டு உள்ளார். அவரது மகனும் ஆல்யா மானசா என்ன செய்கின்றாரோ, அதேபோல் போஸ் கொடுக்கின்றர்.
க்யூட் வீடியோ: இந்த வீடியோ பார்ப்பதற்கே மிகவும் க்யூட்டாக உள்ளது. பலரும் இந்த வீடியோவுக்கு லைக்குகளை தட்டிவிட்டு வருகின்றனர். மேலும் இந்த வீடியோவை பதிவிட்டுள்ள ஆல்யா மானசா, எனது மகன் நான் நடிக்கும் சீரியலின் படப்பிடிப்புத் தளத்தில் உள்ளார் என கேப்ஷனிட்டுள்ளார். மேலும் சஞ்சீவையும் டேக் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











