»   »  இஞ்சி இடுப்பழகி மஞ்சச் செவப்பழகி... குண்டு அனுஷ்காவை பார்த்து பாடப்போகும் ஆர்யா

இஞ்சி இடுப்பழகி மஞ்சச் செவப்பழகி... குண்டு அனுஷ்காவை பார்த்து பாடப்போகும் ஆர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அனுஷ்காவின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இஞ்சி இடுப்பழகி படத்தில் தேவர் மகன் திரைப்படத்தில் கமல் - ரேவதி டூயட் பாடிய இஞ்சி இடுப்பழகி பாடலும் இடம்பெறுகிறதாம்.

சமீபத்தில் வெளியான இஞ்சி இடுப்பழகி படத்தின் டீசர் ரசிகர்களை மிகவும் கவர்ந்து இருக்கிறது, ஏனெனில் படத்திற்காக பல கிலோ உடல் எடையை ஏற்றி முன்னணி நடிகர்களுக்கு இணையாக சாதித்திருக்கிறார் அனுஷ்கா.

ஹீரோயின் என்றாலே அழகாக இருக்க வேண்டும் ஒல்லியாக நடிக்க வேண்டும் என்று தான் பலரும் நினைப்பார்கள், ஆனால் எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் இந்தப் படத்திற்காக உடல் எடையை ஏற்றி இறக்கி ரசிகர்களை ஆச்சரியம் கொள்ள வைத்திருக்கிறார் அனுஷ்கா.

தேவர்மகன் பாடலுக்கும் இஞ்சி இடுப்பழகி படத்திற்கும் என்ன சம்பந்தம் என்பதை கீழே பார்க்கலாம்.

இஞ்சி இடுப்பழகி

இஞ்சி இடுப்பழகி

ஆர்யா - அனுஷ்கா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் இஞ்சி இடுப்பழகி, ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் படம் உருவாகியிருக்கிறது. தெலுங்கில் இப்படத்திற்கு சைஸ் ஜீரோ என்று பெயரிட்டு இருக்கின்றனர்.

படத்தின் கதை

படத்தின் கதை

கதைப்படி அனுஷ்கா குண்டான பெண்ணாக இருக்கிறார் அவரைத் திருமணம் செய்து கொள்ளும் ஆர்யா, திருமணத்திற்குப் பின் அவரது குண்டான உடல் வாகை வெறுக்க ஆரம்பிக்கிறார். இதனால் கஷ்டப்படும் அனுஷ்கா தனது குண்டான உடலை இளைக்க வைத்து கொடியிடை உடலினை எப்படிப் பெறுகிறார் என்பதே படத்தின் கதையாம்.

அனுஷ்காவின் அலட்டல் இல்லாத நடிப்பு

அனுஷ்காவின் அலட்டல் இல்லாத நடிப்பு

படத்தில் அனுஷ்காவின் அலட்டல் இல்லாத நடிப்பால் நீண்ட காலம் கழித்து ஹீரோயினை மையமாகக் கொண்ட இந்தக் கதை ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பாராட்டுகளை குவிக்கும் அனுஷ்கா

பாராட்டுகளை குவிக்கும் அனுஷ்கா

ஒரு ஹீரோயின் படத்தின் கதைக்காக இப்படி மெனெக்கெடுவது இதுதான் முதல் முறை என இயக்குநர்கள் , சினிமா பிரபலங்கள் பலரும் தற்போது பாராட்டத் துவங்கியுள்ளனர்.

தேவர்மகன் படத்தின் பாடல்

தேவர்மகன் படத்தின் பாடல்

கமல் -ரேவதி நடிப்பில் தேவர்மகன் படத்தில் இடம்பெற்ற ‘இஞ்சி இடுப்பழகி மஞ்சச் செவப்பழகி" பாடலும் இந்தப் படத்தில் இடம்பெற இருக்கிறதாம். படத்தின் ஒரு காட்சியில் அனுஷ்காவும், ஆர்யாவும் தேவர் மகன் " இஞ்சி இடுப்பழகி" பாடலை ரசித்துக் கொண்டிருக்க இருவரும் அந்தப் பாடலில் தங்கள் இருவரையும் கற்பனை செய்து கொள்வது போல் காட்சி இடம் பெற்றுள்ளதாம்.

கமல் - ரேவதியை மிஞ்சுவார்களா

கமல் - ரேவதியை மிஞ்சுவார்களா


கமல் - ரேவதி நடித்து இன்றளவும் ரசிகர்களின் நெஞ்சம் கவர்ந்த ஒரு பாடலாக விளங்கும் இந்தப் பாடலில், ஆர்யாவும் அனுஷ்காவும் எப்படி நடித்து இருப்பார்கள் என்னும் ஆர்வம் தற்போது அனைவரிடமும் தொற்றிக் கொண்டுள்ளது.

எப்படி நடித்து இருப்பார்கள் என்று நாமும் பொறுத்திருந்து பார்க்கலாம்...

English summary
Inji Iduppazhagi Recreates Popular Song From Thevar Magan Movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil