ராத்திரியில் நடந்தது என்ன.. கதறும் தாய்.. அதிர வைத்த சித்து மரணம்.. போனைக் கைப்பற்றிய போலீஸ்!
சென்னை: தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நடிகை சித்ராவின் கன்னத்தில் காயம் இருந்ததாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
பிரபல விஜே நடிகை என பல்வேறு முகங்களை கொண்டவர் சித்ரா. 1992ஆம் ஆண்டு மே இரண்டாம் தேதி பிறந்த சித்ரா சைக்காலஜி படிப்பில் மாஸ்டர் டிகிரி முடித்துள்ளார்.
முதலில் மக்கள் தொலைக்காட்சியில்தான் விஜேவாக பணியை தொடங்கினார். பின்னர் பல சீரியல்களில் சிறு கதாப்பாத்திரங்களில் நடித்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்
இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீசன் 2 சீரியலில் நடித்தார். பின்னர் விஜய் டிவியில் 2018ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் சித்ரா.

விளம்பரங்கள்..
முல்லை கதாப்பாத்திரத்திற்காகவே பலரும் இந்த சீரியலை பார்த்து வருகின்றனர். சித்ரா சீரியல் மட்டுமின்றி பல காமெடி ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். மேலும் ஏராளமான துணிக்கடை மற்றும் நகைக்கடை விளம்பரங்களிலும் நடித்து வந்தார்.

முன்னணி சேனல்கள்
மக்கள் தொலைக்காட்சி, விஜய் டிவி மட்டுமின்றி ஜீ தமிழ், சன் டிவி உள்ளிட்ட பல முன்னணி தொலைக்காட்சி சேனல்களிலும் பணியாற்றியுள்ளார். சமூக வலைதளங்களில் செம ஆக்ட்டிவாக உள்ள சித்ரா அவ்வப்போது அசத்தல் போட்டோக்களை வெளியிட்டு குதூகலப்படுத்தி வந்தார்.

நிச்சயதார்த்தம்
28 வயதாகவும் சித்ராவுக்கு சென்னையை சேர்ந்த ஹேமந்த் ரவி என்பவருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதுதொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியானதும் முதலில் மறுத்தார் விஜே சித்ரா. பின்னர் நிச்சயதார்த்தம் நடைபெற்றது உண்மைதான் என ஒப்புக்கொண்டார்.

வருங்கால கணவர்
இந்நிலையில் சென்னை நசரத்பேட்டை அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நேற்றிரவு சீரியல் ஷுட்டிங்கில் பங்கேற்றார் சித்ரா. இன்று அதிகாலை அந்தப் பகுதியில் உளள தனியார் ஹோட்டலில் தனது வருங்கால கணவருடன் வந்து தங்கியுள்ளார் சித்ரா.

மாற்று சாவியின் மூலம்
பின்னார் தான் குளிக்கப்போவதாக கூறி ஹேமந்தை வெளியில் போகச் சொன்ன சித்ரா, நீண்ட நேரமாகியும் கதவை திறக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த ஹேமந்த் ஹோட்டல் ஊழியர்களை அழைத்து வேறொரு சாவியின் மூலம் கதவை திறக்குமாறு கூறியுள்ளார்.

தூக்கில் தொங்கிய சித்ரா
மாற்று சாவியின் மூலம் கதவை திறந்து பார்த்தப்போது சித்ரா அங்கிருந்த ஃபேனில் தூக்கில் தொங்கியது தெரியவந்தது. உடனடியாக ஹோட்டல் நிர்வாகம் நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சித்ராவின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு பிரேத அனுப்பி வைத்தனர்.

போனை கைப்பற்றி விசாரணை
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சித்ராவுடன் ஹோட்டலில் தங்கியிருந்த ஹேமந்திடம் விசாரித்து வருகின்றனர். மேலும் சித்ராவின் மொபைல் போனை கைப்பற்றியுள்ள போலீசார் அவருடன் போனில் பேசியது யார்? அவருக்கு மெசேஜ் செய்தவர்கள் யார் என்பது உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

வேறு காரணங்களா?
மேலும் சித்ராவுக்கு பணி தொடர்பாக அழுத்தம் கொடுக்கப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் நடந்ததா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னத்தில் காயம்
இதனிடையே பிணமாக கிடந்த சித்ராவின் கன்னம் உட்பட உடம்பின் பல இடங்களில் காயம் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அந்த தகவல் உண்மைதானா என்று யாரும் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. இதனிடையே கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அவரது உடலை பார்த்து அவரது தாயாரும் உறவினர்களும் கதறியழுதது கலங்க செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











