இணையத்தில் வைரலாகும்… சிவகார்த்திகேயன் பாடிய இன்னா மயிலு!
சென்னை : கவின் நடித்துள்ள லிப்ட் படத்தில் சிவகார்த்திகேயன் பாடிய பாடல் இணையத்தில் வைரலாகி டிரெண்டிங்கில் உள்ளது.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் பிரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ளார். ஹேப்சி தயாரித்துள்ளார்.
கவினுக்கு ஜோடி பிகில் படத்தில் நடித்த அமிர்தா ஐயர் நடித்துள்ளார். மேலும் பல முக்கிய நடிகர் நடிகைகள் இதில் நடித்துள்ளனர்.

பிரபலமானார்
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் பிரபலமாகி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு மேலும், பிரபலமடைந்தவர் கவின். இவர் நட்புனா என்ன தெரியுமா, சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகர் கவின் நடிப்பில் இயக்குனர் வினித் வரப்பிரஸாத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லிப்ட்.

கவினுக்கு ஜோடி
இந்த திரைப்படத்தில் பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார். எக்கா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு பிரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இன்னா மயிலு
இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடலை சிவகார்த்திகேயன் உள்பட ஒரு சிலர் பாடிய இந்த பாடலை இணையத்தில் ராக் ஸ்டார் அனிருத் வெளியிட்டார். இன்னா மயிலு என்று தொடங்கும் இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி அனைவரும் விரும்பும் பாடலாக உள்ளது. இப்படம் கவினுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மே மாத இறுதியில்
இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், படத்தின் ப்ரமோஷன் பணிகள் தற்போது தொடங்கி உள்ளன. இப்படம் மே மாத இறுதியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











