twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இப்படி சுயநலமா முடிவெடுக்காதீங்க.. நேரடி ஆன்லைன் ரிலீசுக்கு எதிர்ப்பு.. அதிரடியாக அறிவித்த ஐநாக்ஸ்!

    |

    சென்னை: இந்த இக்கட்டான சூழலில் ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுத்து உதவ வேண்டும், இப்படி சுயநலமா முடிவெடுக்காதீங்க என நேரடி ஆன்லைன் ரிலீஸை கண்டித்து ஐநாக்ஸ் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

    சுமார் 68 நகரங்களில் 147 மல்டிபிளக்ஸ் தியேட்டர்களையும் அதில் 626 ஸ்க்ரீன்களையும் கொண்டு மிகப்பெரிய அளவில் தியேட்டர் தொழிலை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேல் ஐநாக்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறது.

    கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு இருக்கும் நிலையில், அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட OTT தளங்களில் புதுப்படங்களை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் தரப்பு முடிவு செய்து வருகின்றனர்.

    இது என்ன ஆச்சரியம்.? அமைதியான வாழ்க்கை.. நடிகர் ராணாவை திடீரென்று வாழ்த்திய பிரபல சர்ச்சை நடிகை! இது என்ன ஆச்சரியம்.? அமைதியான வாழ்க்கை.. நடிகர் ராணாவை திடீரென்று வாழ்த்திய பிரபல சர்ச்சை நடிகை!

    பெரிய சிக்கல்

    பெரிய சிக்கல்

    அவர்களை தங்கள் வலையில் விழ வைக்க இதுதான் சரியான நேரம் என ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களும் பெரிய தொகைக்கு புதிய படங்களை வாங்க முன் வந்து இருப்பது, தியேட்டர் உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய சிக்கலையும் எதிர்கால சவாலையும் உருவாக்கி இருக்கிறது.

    நாடு முழுவதும் பல தியேட்டர் உரிமையாளர்களும், புதுப்படங்களை நேரடியாக ஆன்லைனில் ரிலீஸ் செய்வதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    கடன் சுமை

    கடன் சுமை

    ஆனால், மறுபுறம், சிறு பட்ஜெட் படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர்கள், தியேட்டர்கள் திறக்கவில்லை. நாங்கள் வாங்கிய கடன் சுமை எங்கள் கழுத்தை நெறிக்கிறது. அதனால், முதல் வந்தால் போதும் என அதிக லாபத்துக்கு ஆசைப்படாமல் படங்களை வெளியிட நினைக்கிறோம். கொரோனா போன்ற உலகையே அச்சுறுத்தி வரும் நோய் தொற்று காலத்தில், இனி மேல் தியேட்டர்கள் திறக்கப்படுமா? அப்படியே தியேட்டர்கள் திறந்தாலும், மக்கள் கூட்டம் கூட்டமாக படத்தை பார்க்க வருவார்களா? இதுதான் எதிர்காலம். அதனால், எங்களையாவது பிழைக்க விடுங்கள் என ஆன்லைன் ரிலீசுக்கு ஆதரவு தெரிவிக்க தொடங்கி விட்டனர்.

    அமிதாப் படம்

    அமிதாப் படம்

    இந்நிலையில், நேற்று அமிதாப் பச்சன், ஆயுஷ்மான் குரானா நடிப்பில் சுஜித் சர்கார் இயக்கத்தில் உருவாகி உள்ள குலாபோ சிட்டாபோ படம் வரும் ஜூன் 12ம் தேதி அமேசான் பிரைமில் ரிலீஸ் ஆகிறது என்ற அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பை எதிர்க்கும் விதமாக, ஐநாக்ஸ் நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.

    ஐநாக்ஸ் அறிக்கை

    ஐநாக்ஸ் அறிக்கை

    அதில், இத்தனை காலமாக படத்தை தயாரிப்பவர்களும், தியேட்டர் உரிமையாளர்களும், ஒருவரை ஒருவர் நம்பியே வியாபாரம் செய்து வந்தோம். இந்த இக்கட்டான சூழலில் சுயநலமாக நீங்கள் எடுக்க நினைத்திருக்கும் இந்த முடிவு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. ஐநாக்ஸ் நிறுவனம் சார்பில் நேரடி OTT ரிலீசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

    Recommended Video

    OTT யால் சினிமா THEATER அழியாது | PRODUCER THANU |பொன்மகள் வந்தாள் MOVIE ISSUE | Oneindia Tamil
    தொழில் முடங்கும்

    தொழில் முடங்கும்

    உங்களின் முடிவை மாற்றிக் கொள்ளுங்கள், புதுப்படங்களை நம்பித்தான் தியேட்டர் தொழிலே இருக்கிறது. இந்த நிலைமை சீக்கிரம் சரியாகி விடும். நம்பிக்கை கொள்வோம் தற்போது அவசரப்பட்டு புதுப்படங்களை ஆன்லைனில் நேரடியாக ரிலீஸ் செய்ய தொடங்கினால், எதிர்காலத்தில் அதுவே பழக்கமாகிவிடும். இதனால், பல தியேட்டர் அதிபர்கள் தொழில் பாதிப்பை சந்திப்பார்கள் என நீண்ட அறிக்கையை ஐநாக்ஸ் நிறுவனம் வெளியிட்டு தங்களின் எதிர்ப்பு மிகவும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது.

    English summary
    INOX would like to express extreme displeasure and disappointment on an announcement made by a production house today, to release their movie directly on an OTT platform by skipping the theatrical window run.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X