இந்த படத்தை பார்த்து என்ஜாய் பண்ணுங்க... கூடவே மணிரத்னம் சாங்கை சேர்த்துக்கணும்... மாளவிகா பளீச்

ஐதராபாத் : நடிகை மாளவிகா மோகனன் தமிழ், தெலுங்கு, இந்தி என பட்டையை கிளப்பி வருகிறார்.

தற்போது ஐதராபாத்தில் நடைபெற்றுவரும் தனுஷின் டி43 படத்தின் சூட்டிங்கில் உள்ளார்.

சமூக வலைதளங்களில் பரபரப்பாக செயல்பட்டு வரும் இவர், தற்போது தனது அழகான புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

தனுஷின் டி43 சூட்டிங்

தனுஷின் டி43 சூட்டிங்

நடிகை மாளவிகா மோகனன் விஜய்யின் மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது தனுஷூடன் இணைந்து டி43 படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இதன் சூட்டிங் ஐதராபாத்தில் துவங்கியுள்ளது. இதில் பங்கேற்று நடித்து வருகிறார். தெடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கில் ராம்சரண் இணையவுள்ள படத்திலும் இவர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமூக வலைதளத்தில் பிசி

சமூக வலைதளத்தில் பிசி

மேலும் பாலிவுட்டிலும் சில படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.. தன்னை பாலிவுட்டில் முன்னணி நடிகையாக்கிக் கொள்ள திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார் மாளவிகா. சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து தன்னை பிசியாக வைத்துக் கொண்டுள்ளார்.

புகைப்படங்கள் பகிர்வு

புகைப்படங்கள் பகிர்வு

அவ்வப்போது பல ட்வீட்களை செய்து ரசிகர்களை கொள்ளை கொள்ளும் இவர், பல போட்டோஷுட்களை நடத்தி புகைப்படங்களை பகிர்வதோடு, தனிப்பட்ட முறையில் படங்களையும் எடுத்து பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மணிரத்னம் பாடலை சேர்க்க கோரிக்கை

மணிரத்னம் பாடலை சேர்க்க கோரிக்கை

அழகான வெள்ளைநிற உடையில் வலம்வரும் அவர், வெட்கத்தையும் தனது ஆயுதமாக்கியுள்ளார். இது போதாது என்று இந்த புகைப்படத்திற்கு இயக்குநர் மணிரத்னம் படத்தின் பாடலை சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கேப்ஷனில் தனது ரசிகர்களுக்கு அன்புக் கட்டளை இட்டுள்ளார். ரசிகர்கள் கண்டிப்பாக சேர்த்துக் கொள்வார்கள் மாலு மேம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X