விஜய் நீலாங்கரை வீடு.. அதற்காக சங்கீதா எவ்வளவு உழைச்சாங்க தெரியுமா?.. இப்போ தங்கவே அனுமதி தேவையா?

சென்னை: விஜய் மீது சங்கீதா சொல்லியிருக்கும் குற்றச்சாட்டுக்கள் பெரிய விவாதத்தை கிளப்பியிருக்கின்றன. பெண்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் இமேஜ் இதன் மூலம் சுக்கு நூறாக உடைந்துவிட்டது என்பது பல பேரின் கருத்தாக இருக்கிறது. இந்த விஷயம் குறித்து ஆளாளுக்கு என்னென்ன பேசினாலும் விஜய் இன்னும் வாயை திறக்காமல்தான் இருக்கிறார். அவர் எப்போதுதான் வாயை திறப்பார் என்பது குறித்து ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஆவலோடு காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் மனைவி சங்கீதா சில நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவில், "விஜய் திருமணத்தை மீறிய உறவில் இருந்தார். அதனை நான் தட்டிக்கேட்டேன். எனவே அவர் என்னை சுதந்திரமாக நடமாட விடாமல் தடுத்தார். அதேபோல் எனக்கான நிதி ஆதாரத்தையும் தடுத்து கட்டுப்பாடுகள் விதித்தார். செலவுக்கு பணம் தரவில்லை. நடிகையுடனான உறவை கண்டிப்பாக முறித்துக்கொள்வேன் என்றும் உறுதியளித்தார். ஆனால் அவரது நடவடிக்கையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.

நடிகையின் பெயரையும் சேர்ப்பேன்: அதன் காரணமாக பெரிய மன உளைச்சலில் இருந்தேன். விஜய்யுடன் இருந்த புகைப்படங்களை பகிர்ந்ததால் குடும்பத்துக்கு அவமானம் ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட நடிகையுடன் விஜய் வெளிநாடுகளுக்கும் சென்றிருந்தார். அதனை நடிகையே பகிரவும் செய்திருந்தார். பொதுவெளியில் நன்மதிப்பை கெடுக்கக்கூடாது என்பதற்காக அந்த நடிகையின் பெயரை குறிப்பிடவில்லை. கணவர் மூலம் நெருக்கடி ஏற்பட்டால் அந்த நடிகைக்கும், எனது கணவருக்கும் இருக்கும் உறவை வெளிப்படுத்தும் ஆதாரங்களை நீதிமன்றத்தில் வழங்குவேன். தேவைப்பட்டால் எனது கணவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் நடிகையை வழக்கின் இரண்டாவது எதிர் மனுதாரராக சேர்ப்பேன்.

Inside Vijay s Neelankarai Bungalow Sangeetha s 60-Day Interior Work Revealed
Photo Credit:

உளவியல் ரீதியாக பிரச்னை: விஜய்க்கு உளவியல் ரீதியான பிரச்னை இருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களாகவே நானும் அவரும் மனதளவில் பிரிந்துதான் வாழ்கிறோம். நடிகை பகிர்ந்த புகைப்படங்களால் எனது குழந்தைகளுக்கு அவமானம் ஏற்பட்டது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும். விஜய்யின் வருமானத்துக்கு தகுந்தவாறு எனக்கு வாழ்க்கை முழுவதும் ஜீவனாம்சம் வேண்டும். இந்த வழக்கு விசாரணை முடியும்வரை நீலாங்கரை வீட்டில் நான் தங்குவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும். வழக்கு செலவை விஜய்யே ஏற்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.

Also Read
பற்றி எரியும் சங்கீதா பஞ்சாயத்து.. கொந்தளித்த விஜய்.. சாட்டையடி கேள்வியா கேட்டிருக்காரே ப்பா!
பற்றி எரியும் சங்கீதா பஞ்சாயத்து.. கொந்தளித்த விஜய்.. சாட்டையடி கேள்வியா கேட்டிருக்காரே ப்பா!

சங்கீதா மீது அட்டாக்: அந்த மனு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் வழக்கம்போல் சைலெண்ட் மோடுக்கு சென்றுவிட்டார். ஆனால் அவரது ரசிகர்களோ, தொண்டர்களோ அப்படி செல்லவில்லை. தனிநபர் வாழ்க்கையை பேசக்கூடாது என சொல்லி சொல்லியே; சங்கீதாவை கடுமையாக விமர்சித்துவருகிறார்கள். அதற்கு பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தார்கள். இந்நிலையில் நீலாங்கரையில் கட்டப்பட்ட விஜய்யின் புதிய பங்களாவில் சங்கீதாவின் பங்களிப்பு என்னவென்பது குறித்து பார்க்கலாம்.

சங்கீதா என்ன செய்தார்?: அதாவது அந்த பங்களாவை சிறப்பாக கட்ட வேண்டும் என்பதில் சங்கீதா உறுதியாகவும், தெளிவாகவும் இருந்திருக்கிறார். பங்களாவின் உள்ளே ரிச்சாக அலங்காரம் இருக்க வேண்டும். பார்ப்பவர்கள் பிரமிப்பில் வாயடைத்து போக வேண்டும் என முடிவெடுத்தாராம். அதனையொட்டி தனது மகள் சாஷாவுடன் சீனாவுக்கு சென்றாராம். அங்கே சென்று கிட்டத்தட்ட 35 நாட்கள் தங்கி வீட்டுக்குள்ளே எப்படி அலங்காரம் இருக்க வேண்டும், கழிவறை திரைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதையெல்லாம் திட்டமிட்டு; அதற்கான பொருட்களை பார்த்து பார்த்து வாங்கி வந்தாராம்.

மொத்தம் 60 நாட்கள் அந்த அலங்கார பணிகள் நடந்தனவாம். அத்தனை நாட்களிலும் வேறு வேலை எதுவும் பார்க்காமல் முழு மூச்சாக இதே வேலையில்தான் இருந்தாராம். இந்தத் தகவலை சாட்டை துரைமுருகன் பகிர்ந்துகொண்டார். இந்தத் தகவலை கேள்விப்பட்ட ரசிகர்களோ, இப்படி கட்டிய வீட்டில் தனக்கு தங்க அனுமதி வேண்டும் என கேட்கும் நிலைமை உருவாகிவிட்டதே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X