நம்ம லுங்கி பாய்ஸ் ராஜ் பிரியனுக்கு பெண் குழந்தை பிறந்தது.. உற்சாகத்தில் குடும்பத்தினர்

சென்னை: நடந்து முடிந்த 19 வது ஐபிஎல் சீசனில் தோனி இந்த மேட்சில் ஆடுவாரா அடுத்த மேட்சிலாவது ஆடுவாரா என்று எதிர்பார்த்த சென்னை அணி ரசிகர்களைக் காட்டிலும் இன்றைய மேட்ச்க்கு லுங்கி பாய்ஸ் டீம் ராஜ் பிரியன் குழுவினர் என்ன வீடியோ பகிர போகிறார்கள் என்ற ஆவல் தான் அதிகம் இருந்தது. இன்னும் சொல்லப்போனால் ஐபிஎல் பார்க்கிறார்களோ இல்லையோ, இவர்களின் வீடியோவைப் பார்த்து ரசித்து சிரித்தவர்கள் ஏராளாம். இப்படி இருக்கையில் ராஜ் பிரியன் - சக்தி பிரியன் தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இது தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ள லுங்கி பாய்ஸ் குழுவினர், குட்டி பிரியனுக்கு தங்கச்சி வந்தாச்சு என்று பதிவிட்டுள்ளார்கள். பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

சமூக வலைதளங்களை மக்கள் பரவலாக பயன்படுத்தத் தொடங்கிய பின்னர், மக்கள் பலரும் தங்களது, திறமைகளை வெளிக்காட்டி பிரபல்யம் அடைந்து வருகிறார்கள். மேலும் சிலரோ கவனி ஈர்ப்புக்காக பல வித்தியாச வித்தியாசமான டெக்னிக்குகளை பின்பற்றி சமூக வலைதளங்களில் பிரபலங்களாக உருவெடுக்கிறார்கள். அப்படியானவர்களில் ஒருவர் தான் லுங்கி பாய்ஸ் டீம் ராஜ் பிரியன். இவரும் இவரது நண்பர்களும் இணைந்து ஆரம்பத்தில், உள்ளாடை தெரியும் அளவுக்கு லுங்கியை வயிறு வரை ஏற்றிக் கட்டி, நகைச்சுவையான முறையில் நடன அசைவுகளில் நடனமாடி வீடியோ பதிவிட்டு வந்தார்கள்.

Instagram Celebrities IPL Fame Lungi Boys Rajpriyan Sakthipriyan Couple Blessed With Baby Girl

லுங்கி பாய்ஸ்: அதன் பின்னர் ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்கள் சண்டைகள், சமூகத்தில் நடைபெறும் சில சுவாரஸ்ய சம்பவங்களை எல்லாம் தங்களது கோணத்தில் வீடியோ பதிவிட்டு வந்தார்கள். ஆனால் இந்த முறை, இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறிய துரந்தர் பட பாணியில் ஹம்சா அலி கதாபாத்திரமாக ராஜ் பிரியன் பெங்களூரு அணி ரசிகர்களுடன் இருந்து அவர்களின் நடவடிக்கைகளை கவனிப்பதும், சென்னை அணி தோல்விகளை சந்திக்கும் போது சிரித்துக் கொண்டே அழுவதும் என செம்ம ரகளை வீடியோக்கள் பலரது கவனத்தைப் பெற்றது.

ஃபிஃபா: இப்படி இருக்கையில் தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் தொடர்பாகவும் வீடியோ போடுங்கள் என்று ரசிகர்கள் பலரும் கோரிக்கை வைக்க, எடுத்த எடுப்பிலேயே எங்களுக்கு கால்பந்து குறித்து எதுவும் தெரியாது, நீங்கள் கேட்பதால் வீடியோ பதிவிடுகிறோம் என்ற கண்டிஷன்ஸ் அப்ளை என்பது போலக் கூறி வீடியோ பகிர்ந்து வருகிறார்கள். கால்பந்து தொடர்பான வீடியோக்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Instagram Celebrities IPL Fame Lungi Boys Rajpriyan Sakthipriyan Couple Blessed With Baby Girl

பெண் குழந்தை: இந்நிலையில், ராஜ் பிரியன் - சக்தி பிரியன் தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இது தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ள லுங்கி பாய்ஸ் குழுவினர், குட்டி பிரியனுக்கு தங்கச்சி வந்தாச்சு என்று பதிவிட்டுள்ளார்கள். பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இவர்களுக்கு முதலில் ஆண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X