Allu Arjun: அரஸ்ட் செய்யப்பட்ட அல்லு அர்ஜுன்.. ஆட்டம் போடும் அமலா ஷாஜி.. ஆத்திரத்தில் ரசிகர்கள்!
சென்னை: ஒட்டு மொத்த இந்தியாவுமே பரபரப்பாக பேசிக்கொண்டு இருக்கும் விஷயம் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டது தொடர்பாகத்தான். கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்தது மாவட்ட நீதிமன்றம். இதனால் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுமட்டும் இல்லாமல், அல்லு அர்ஜுனுக்கு தெலங்கானா உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனாலும் அல்லு அர்ஜுன் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு காரணம், ஜாமீன் தொடர்பான ஆவணங்கள் தயாராவதில் காலதாமதம் ஏற்பட்டதாக, கூறப்படுகின்றது. இப்படியான நிலையில், இன்ஸ்டா பிரபலமாக இருக்கும் அமலா ஷாஜி புஷ்பா 2 படத்தில் இடம் பெற்றுள்ள பீலிங்ஸ் பாடலுக்கு நடனம் ஆடி, ரீல்ஸ் வெளியிட்டுள்ளார்.
அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 5ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆன படம் புஷ்பா 2. இந்தப் படத்தினை சுகுமார் இயக்க, மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரித்தது. படத்திற்கு ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ப்ரீமியர் காட்சிகளுக்கு அரசு அனுமதி அளித்திருந்தது. இதனால் நள்ளிரவில் படம் திரையிடப்பட்டது. இப்படியான நிலையில், ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில், ப்ரீமியர் காட்சியைப் பார்க்க ரசிகர்கள் ஆயிரக் கணக்கில் கூடி இருந்தனர். இப்படியான நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் காவல்துறைக்கு முன் அறிவிப்பு எதுவும் கூறாமல், படம் பார்க்க சந்தியா தியேட்டருக்கு வந்தார். அல்லு அர்ஜுனைப் பார்த்த ரசிகர்கள் ஆரவாரத்தில் ரசிகர்கள் மத்தியில், நெரிசல் அதிகரித்தது.

இதனால் ஏற்பட்ட நெரிசலில், ரேவதி என்ற ரசிகை பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ரேவதியின் மகன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இப்படியான நிலையில், ரேவதியின் மரணத்திற்கு அல்லு அர்ஜுன் மற்றும் சந்தியா தியேட்டர் நிர்வாகத்தினர்தான் காரணம் எனக் கூறி, காவல்துறை வழக்கு பதிவு செய்தது. ரேவதியின் குடும்பத்தாருக்கு அல்லு அர்ஜுன், ரூபாய் 25 லட்சம் நிதி உதவி வழங்கியது மட்டும் இல்லாமல், தனது வருத்தத்தையும் தெரிவித்தார்.

பரபரப்பு: இந்த வழக்கு தொடர்பாக நேற்று காவல்துறை அல்லு அர்ஜுனை கைது செய்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிக்கடபள்ளி காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். விபரம் தெரிந்ததும் ரசிகர்கள் காவல்நிலையத்தைச் சூழ்ந்தனர். மேலும், தயாரிப்பாளர் தில் ராஜு உடனே காவல்நிலையத்திற்கு வந்தார். சிரஞ்சீவியும் வருவதாக இருந்தது. ஆனால் அவரை காவல்துறை சார்பில் காவல்நிலையத்திற்கு வரவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதால், அவர், அல்லு அர்ஜுன் வீட்டிற்குச் சென்றார்.

ஜெயில்: அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்கு முன்னர், மனம் உடைந்து அழுது கொண்டு நின்ற அவரது மனைவி, சினேஹா ரெட்டிக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்து, அழக்கூடாது, தைரியமாக இருக்கவேண்டும் எனக் கூறினார். அப்படியான நிலையில், அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் கிடைத்து வீட்டுக்கு வந்துவிடுவார் என மொத்த குடும்பத்தினரும் நினைத்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியும், அல்லு அர்ஜுனால் வீட்டிற்குத் திரும்பமுடியவில்லை. நேற்று இரவு முழுவதும் சிறையில் இருந்த அல்லு அர்ஜுன், இன்று ஜாமீனில் வெளியே வந்தார்.
பீலீங்ஸ்: இப்படியான நிலையில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட்டு இணையவாசிகள் மத்தியில் பிரபலமடைந்த அமலா ஷாஜி, புஷ்பா 2 படத்தில் இடம் பெற்றுள்ள பாடலான, பீலீங்ஸ் பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வெளியிட்டுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்தாலும், அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட சமயத்திலா பதிவிடனும் எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், இது அல்லு அர்ஜுனின் ரசிகர்களை ஆத்திரமடையவும் செய்துள்ளது.



Click it and Unblock the Notifications











