கடனால் இன்ஸ்டாகிராம் ஐ.டியை விற்கும் இளைஞர்.. நெருக்கடியிலும் குறையாத நேர்மை.. குவியும் பாராட்டு!

சென்னை: இணையம் வளர்ந்த பின்னர், தங்களது திறமையை வெளிப்படுத்த வாய்ப்புக்காக ஏங்கிக் கொண்டு இருந்த பலருக்கும் மேடை அமைத்துக் கொடுத்துவிட்டது. இணையத்தை சரியாகப் பயன்படுத்தி தனது திறமையை வெளிப்படுத்தி, மக்கள் மத்தியில் பாராட்டையும் அன்பையும் பெற்ற நபர்கள் ஏராளம். சாதாரண மனிதர்களையும் பிரபலங்களாக இணையம் மாற்றி வைத்துள்ளது. அப்படி இருக்கும்போது, இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் இணையவாசிகள் மத்தியில் நல்ல பிரபலமடைந்த ஷாம் என்ற இளைஞர் தனது, குடும்பம் கடன் நெருக்கடியில் உள்ளதால், தனது ஐ.டியை விற்பனை செய்வதாக அறிவித்துள்ளார். இது பலரையும் ஷாக் ஆக்கியுள்ளது.

இணையத்தினை சரியாகப் பயன்படுத்தி அதன் மூலம் வருவாய் ஈட்டி, குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் இணையவாசிகளும் இருக்கின்றனர். இணையத்தை தவறாக பயன்படுத்தி அதன் மூலம் தவறு செய்து, காவல் துறையால் கைது செய்யப்பட்டு, சிறைக்குச் சென்ற இணையவாசிகளும் உள்ளனர். அந்த வகையில் இந்த ஸ்டோரி, முதல் ரகத்தினைச் சேர்ந்த ஒரு இணையவாசியைப் பற்றியது.

instagram

இன்ஸ்டாகிராமில் sham__6 என்ற ஐ.டியில் இருக்க கூடிய இளைஞர் ஷாம். இவர் இன்ஸ்டாகிராமில் பல மொழிகளில் இடம் பெற்றுள்ள பாடல்களை பாடி, அதன் மூலம் இணையவாசிகளைக் கவர்ந்தவர். இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார், இரண்டு லட்சத்து 54 ஆயிரங்களுக்கும் அதிகமான இணையவாசிகள் பின் தொடருகின்றனர். இவரை, ஏ. ஆர். ரகுமானின் பேஸ் கிட்டாரிஸ்ட்டான மோகினி டே, பிரபல பாடகி ப்ரியா ஜெர்சன் உள்ளிட்ட பல பிரபலங்களுமே பின் தொடருகின்றனர்.

ரசிகர்கள்: இதுவரை மொத்தமாகவே, அவரது இன்ஸ்டாவில் 28 போஸ்ட்கள் பதிவிட்டுள்ளார். 28 போஸ்ட்கள் மட்டுமே பதிவிட்டு, 2 லட்சத்து 54 ஆயிரங்களுக்கு மேலானா ஃபாலோவர்ஸ்கள் இருகின்றார்கள் என்றால் அவரது திறமையை இணையவாசிகள் அங்கீகரித்துள்ளார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகின்றது. இப்படியான நிலையில் இவர் தனது இன்ஸ்டாவில் ஸ்டோரியில் சில பதிவுகளைப் பதிவிட்டுள்ளார்.

instagram

கடன்: அதாவது, தங்களது குடும்பம் பெரும் கடன் தொல்லையில் அவதிப்படுகின்றது. எனவே எனது இன்ஸ்டாகிராம் ஐ.டியை அதாவது இன்ஸ்டாகிராம் பக்கத்தினை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளேன். எனது அப்பாவிற்கும் உடல்நிலை சரியில்லை, அவரது மருத்துவச் செலவுக்கும் அதிகப்படியான பணம் தேவைப்படுகின்றது. எனவேதான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன். நான் மீண்டும், உங்களிடத்தில் வருவேன்.

instagram

ஐ.டி. விற்பனை: யாராவது ஒரு நல்ல தொழில் செய்ய இந்த ஐ.டி.யை வாங்கிக் கொண்டால், எனக்கு உதவியாக இருக்கும். எனக்கு தனிப்பட்ட முறையில் யாரிடம் இருந்தும் பணம் வேண்டாம். நான் எனது ஐ.டி.யை விற்று அதன் மூலம் வரும் பணத்தைக் கொண்டு எனது வீட்டுக் கடனை அடைத்துவிடுவேன். பணம் திரட்டும் நோக்கத்தில் இதைப் பதிவிடவில்லை. 100க்கும் மேற்பட்டோர் எனக்கு தனிப்பட்ட முறையில் உதவ மேசேஜ் செய்துள்ளீர்கள். ஆனால், எனது ஐ.டி.யை நான் விற்பனை செய்யவே விரும்புகின்றேன். நான் பணம் திரட்ட இதுபோன்று செய்கின்றேன் எனக் கருதவேண்டாம். எனது ஐ.டி.,யை வாங்குபவர்கள் அதனை நல்ல தொழிலுக்கு பயன்படுத்தினால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். நன்றி" என பதிவிட்டுள்ளார். இவரது இந்த முடிவு அவரைப் பின் தொடருபவர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

instagram

நேர்மை: தனது வறுமையிலும் தனது உழைப்பால், தான் உருவாக்கிய தனது இன்ஸ்டாகிராம் ஐ.டியை விற்றுவிட்டு, அதன் மூலம் வரும், பணத்தைக் கொண்டு நான் எங்களது கடனை அடைத்துவிடுவேன் என அவர் கூறியுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதாவது தனது வறுமையிலும் நேர்மையாகவும் சுயமரியாதையாகவும் இந்த இளைஞன் ஷாம் என பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X