ஒரு புருசன் கூட சரியில்லை.. விஜய் த்ரிஷா குறித்து கமெண்ட் அடித்த திருநங்கை தனுஜா சிங்கம் வேதனை

சென்னை: இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமான நபர் தனுஜா சிங்கம். இவர் ஜெர்மனியில் வசிக்கும் இலங்கைத் தமிழர், மற்றும் இவர் திருநங்கை. தான் சார்ந்த மூன்றாம் பாலித்தனவர் எதிர்கொள்ளும் இன்னல்கள், இலங்கைத் தமிழர் பிரச்னைகள், பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்கொடுமைகள், அத்துமீறல்கள் குறித்து மிகவும் தைரியமாக பேசக்கூடிய ஒரு இணையதளவாசியாக தனுஜா சிங்கம் உள்ளார். இவர் தன்னை தனது ஃபாலோவர்கள் அக்கா என அழைப்பதை விரும்புவதால், எதாவது வீடியோ பதிவிடும்போது அக்கா அக்கா என தன்னைத் தானே கூறிக்கொள்வார். இந்நிலையில் அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

தனுஜா, இலங்கைத் தமிழர் மட்டும் இல்லாமல், பல் மருத்துவம் படித்த மருத்துவர். அதேநேரத்தில் தனுஜா தனது சொந்த வாழ்க்கையில் அவர் எதிர்கொண்டவற்றை தனது ஆட்டோபயோகிராபி புத்தகமான, "தனுஜா - ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்" என்ற பெயரில் எழுதி வெளியிட்டுள்ளார். எழுத்தாளராகவும் தனுஜா வெற்றி பெற்றவராக திகழ்கின்றார். இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் ஆறு லட்சத்து 50 ஆயிரம் பேர் பின் தொடருகின்றனர்.

instagram

தனுஜாவைப் பொறுத்தவரை தனது மனதில் படும் விஷயங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசி வீடியோவாக பதிவிடுவதை வாடிக்கையாக் கொண்டுள்ளார். குயர் சமூகத்திற்காக இவர் பேசும் கருத்துகள் பலரது மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேநேரத்தில் மிகவும் ஜாலியான பெண்ணான தனுஜா, தான் எப்போதும் கூடுமானவரை மகிழ்ச்சியாக இருக்கும் வீடியோக்களையே தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகின்றார்.

சந்தோசமாக இருக்க: இப்படியான நிலையில், தனுஜா தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில், தன்னை பின் தொடரும் இணையவாசி ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதாவது, எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கின்றீர்காளே? எப்படி? எனக் கேட்டுள்ளார் அந்த இணையவாசி. அதற்கு, எனக்கும் வீட்டு வேலைகள் உள்ளது. வீட்டில் பாத்திரங்களைக் கழுவாமல் அப்படியே போட்டுவிட்டு வந்துவிட்டேன். அலுவலகத்தில் நான் குறைவான நேரங்கள் மட்டுமே பணி செய்துள்ளதால், இந்த வாரம் வெள்ளிக்கிழமையும் வேலை செய்யலாம் என முடிவெடுத்துள்ளேன். நான் முடங்கிப்போக ஆயிரம் காரணங்கள் உள்ளது.

instagram

ஒரு புருசனும் சரியில்லை: ஆனாலும் நான் சந்தோஷமாக இருக்கவும் ஆயிரம் காரணங்கள் உள்ளது. சில நேரங்களில் எனது வீடியோக்களைப் பார்த்து நானே, ' வாழ்றடி' என கமெண்ட் அடித்துக் கொள்வேன். இவையெல்லாவற்றிற்கும் மேல், நீங்கள் கொடுக்கும் அன்பு. என்னை மேலும் மகிழ்ச்சியாக்குகின்றது. காதலர் தினம் வேற வருகின்றது. எந்த புருசன் என்ன கிஃப்ட் வாங்கித் தரப்போகின்றான் எனத் தெரியவில்லை. எந்தப் புருசனோடு காதலர் தினத்தை கொண்டாடுவது எனத் தெரியவில்லை. ஒரு புருசனும் சரியில்லை" என அந்த வீடியோவில் பேசியுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

விஜய் த்ரிஷா: தனுஜா, கோட் படம் வெளியானபோது, விஜய், அவரது மனைவி சங்கீதா குறித்தும் நடிகை த்ரிஷா குறித்தும் பேசி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதாவது, சங்கீதா அக்கா நீங்க கவலைப் படவேண்டாம். நான் இலங்கைத் தமிழராக உங்களுடன் நிற்கின்றேன். மேலும் த்ரிஷா இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளாராமே, த்ரிஷா நடனமாடினால் தியேட்டரையே கொளுத்தி விட்டுடறேன் என அந்த வீடியோவில் பேசி பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவும் வேகமாக பரவியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X