அரைகுறை ஆடையுடன் ஆத்தங்கரையில் போட்டோ ஷூட்.. தர்ஷா குப்தா கலக்கல் போட்டோஸ்!
சென்னை: நடிகை தர்ஷா குப்தா ஆத்தங்கரையில் நடத்திய போட்டோ ஷூட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு சென்றவர்களில் தர்ஷா குப்தாவும் ஒருவர். தற்போது யோகிபாபு ஜோடியாக மெடிக்கல் மிராக்கில் என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா பதிவிடும், புகைப்படங்கள் மற்றும் வீடியோவிற்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

நடிகை தர்ஷா குப்தா: கோயம்புத்தூரில் பிறந்த தர்ஷா குப்தா, கல்லூரியில் படிக்கும் போதே, மாடலிங்கில் ஆர்வம் இருந்ததால், சின்ன சின்ன விளம்பரங்களில் நடித்துள்ளார். அதன்பிறகே நடிப்பிற்கான வாய்ப்பை பெற்றார். ஆனால் இவருக்கு முதலில் வாய்ப்பு கிடைத்தது என்னவோ சின்னத்திரை சீரியல்களில்தான். ஜீ தமிழ் சேனலில் இவர் நடித்த முள்ளும் மலரும் சீரியல் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது.
விஜய் டிவியில்: இதைத்தொடர்ந்து, மின்னலே, செந்தூரப் பூவே போன்ற சில சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார். மேலும், விஜய் டிவியில் சிங்கிள் பொண்ணுங்க, சூப்பர் சிங்கர், கே.பி.ஒய் காமெடி திருவிழா, உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கெஸ்டாக பங்கேற்றார். விஜய் டிவியின் காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று அசத்தினார்.
ருத்ரதாண்டவம்: மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ரதாண்டவம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் தமிழ் சினிமாவில் அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்திருந்தாலும், அதன்பிறகு அவருக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. ருத்ரதாண்டவம் படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான எஃப்ஏபி விருதை வென்றிருந்தார். அடுத்து ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடித்திருந்தார்.
ஆத்தங்கரையில் போட்டோஷூட்: தற்போது, யோகி பாபுவிற்கு ஜோடியாக மெடிக்கல் மிராக்கிள் என்ற படத்தில் நடித்து வரும் தர்ஷா குப்தாவை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ பண்ணும் 2.2 மில்லியன் ரசிகர்களை குஷி படுத்தும் விதமாக கலக்கலான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது, கிராமத்து கெட்டப்பில் ஆத்தங்கரையில் துணியை துவைத்துக்கொண்டு இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவிற்கு கேப்ஷனாக ஆறாத காயங்களுக்கு, நீண்ட தூர பயணமும் இயற்கையும் தான் சிறந்த மருந்தாக இருக்கின்றது என பதிவிட்டுள்ளார்.
கேரள புடவையில்: இரு தினத்திற்கு முன் தர்ஷா குப்தா, கேரள சேலையை கண்ட மேனிக்கு கட்டிக்கொண்டு வெளியிட்டிருந்த ஹாட் போட்டோஸ், இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது. அந்த போட்டோவைப் பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள், லைக்குகளை மலைபோல் குவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











