நல்ல வீடியோ போட்டேன் யாருமே கண்டுக்கல.. அதான் இப்படி இறங்கிட்டேன்.. இன்ஸ்டா பிரபலம் சமிக்ஷா ஓபன்!
சென்னை: இன்ஸ்டாகிராமில் பலூன் அக்கா முதல் பீரோ அக்கா வரை என கடந்த ஆண்டு ஏகப்பட்ட அக்காக்கள் திடீரென இன்ஸ்டாகிராம் பிரபலங்களாக முளைத்து சோஷியல் மீடியா ரசிகர்களை கதிகலங்க செய்தனர். இன்ஸ்டாகிராம் முழுக்கவே ஆபாச செயலி போலவே மாற முக்கிய காரணமே இந்த அக்காக்கள் தான் என்கின்றனர். இந்நிலையில், சமீபத்தில் பிரஸ் மீட் ஒன்றில் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சமிக்ஷா அளித்துள்ள பதில் பலரது கவனத்தை திருப்பியுள்ளது.
எளிதில் பணம் சம்பாதித்து விடலாம் என்றும் பிரபலமாகி விட வேண்டும் என்றும் சில இளம் பெண்கள் இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்ஸர்களாக மாறி வருகின்றனர். ஆர்ஜேவாகவும் விஜேவாகவும் இருந்து பெரிதாக சம்பாதிக்க முடியாத நிலையில், இப்படி இன்ஸ்டாகிராமில் ஆபாச வீடியோக்களை வெளியிட்டால் போதும் வசதியாக வாழலாம் என நினைத்து பல இளம் பெண்கள் தவறான பாதைக்கு சென்றுவிடுவதாக எச்சரிக்கை மணி அடித்தாலும் அது தெரிந்தே தான் அவர்கள் அந்த பாதைக்கு செல்வதாக கூறுகின்றனர்.

அதற்கு முக்கிய காரணம் அதுபோன்ற ஆபாச விஷயங்களுக்குத்தான் நெட்டிசன்கள் ஏங்கிக் கிடக்கின்றனர் என்றும் அதன் மூலமே தங்களுக்கு நல்ல வருமானம் கிடைத்து வருவதாகவும் வெளிப்படையாகவே பேசியுள்ளார் சமிக்ஷா.
அக்கா என்கிற சொல்லுக்கே அசிங்கம்: பெண்களை பொதுவாக அக்கா என்றும் தங்கை என்றும் அம்மா என்றும் தான் பிற ஆண்கள் அழைப்பது வழக்கம். அக்கா என்றாலே அம்மாவுக்கு அடுத்தபடியான உறவாக பார்க்கப்பட்டு வரும் நிலையில், பல இளம் பெண்கள் மீரா மிதுன் ரூட்டை எடுத்துக் கொண்டு ஆபாச கமெண்ட்டுகளுக்கு பதில் அளிக்கிறேன் பாருங்க என இன்ஸ்டா அக்காக்களாக மாறி அந்த சொல்லுக்கே அசிங்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
ஆன்லைன் விபச்சாரம்: சில முன்னணி நடிகைகளே சோஷியல் மீடியாவிலும் தனியாக ஆப் மூலமாகவும் இளைஞர்களுடன் ஆபாச சாட் செய்வது, தனது உடல் பாகங்கள் தெரிவது போன்று ஆபாசமான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு சம்பாதிக்கும் ரூட்டை கண்டு பிடித்து பயன்படுத்தி வருவது பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. இன்ஸ்டா பிரபலங்களின் கமெண்ட்டுகளில் சில விஷமிகள் ஆபாசமாக கமெண்ட் செய்ய அதை எடுத்து படித்துப் பார்த்து படு ஆபாசமாக விளக்கம் கொடுப்பது போன்ற வீடியோக்களை வெளியிட்டு இன்ஸ்டா பிரபலமாக மாறியுள்ளார் சமிக்ஷா.
நல்ல வீடியோவை போட்டேன் பார்க்கல: ஏன் இப்படியெல்லாம் இளைஞர்களை கெடுக்கும் விதமாக வீடியோக்களை போடுறீங்க என்கிற கேள்வியை சமிபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது சமிக்ஷாவிடம் சிலர் எழுப்ப, இப்போ நான் போடுற வீடியோக்களை பார்த்துவிட்டு அப்படி பேசுறீங்க, இப்போ தான் நான் உங்க கண்களுக்கே தெரிகிறேன். ஆரம்பத்தில் நான் போட்ட நல்ல வீடியோவை எல்லாம் எடுத்து பாருங்க, லைக் வராது, கமெண்ட் வராது, இன்ஸ்டாகிராம் மூலமாக காசும் வராது. ஆனால், இப்போ எல்லாமே வருது என்றார்.
தெரிந்து தான் பண்றேன்: இதனால் ஏற்படும் பின் விளைவுகள், இதனால் ஏற்படும் அவமானங்கள், பாதிப்புகள் என அனைத்தையும் அறிந்து தான் இதை பண்றேன். இதை பார்க்கத்தான் இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றன்ர். அப்படி இல்லை என்றால் இப்படி வீடியோக்களை எங்களை போன்ற பெண்கள் ஏன் போடப் போகின்றனர் என்றும் சமிக்ஷா ஓபனாகவே பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











