மஞ்சள் தேச்சி குளி செல்லம்.. நீ நேச்சுரலாவே அழகு.. பீரோ அக்காவிடம் வழியும் நெட்டிசன்கள்.. எதுக்கு?
சென்னை: இன்ஸ்டாகிராமில் 18 பிளஸ் வீடியோக்கள் போட்டு பிரபலமானவர்களில் ஒருவர் வி.ஜே. அபிநயா. இவரது 18 பிளஸ் வீடியோக்களுக்கும் அதற்கு வரும் கமெண்ட்களை பார்க்கவும் இவரை பலரும் பின் தொடர்கிறார்கள். இந்நிலையில் இவர் சமீபத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்றிற்கு அவரைப் பின் தொடரும் இணையவாசிகள் ஓவராக வழிந்து வருகிறார்கள். அது ஏன் எதற்கு என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
வி.ஜே. மற்றும் சின்னத்திரை நடிகையாக இருப்பவர் அபிநயா. அவர் இன்ஸ்டாகிராமில் இன்ஃப்ளூயன்சராக உள்ளார். இவர் இன்ஸ்டாகிராமில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். அவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடருகிறார்கள். அவரை இன்ஸ்டாகிராமில் எந்த அளவுக்கு கொண்டாடுகிறார்களோ அதே அளவுக்கு விமர்சிக்கும் நெட்டிசன்களும் உள்ளனர். குறிப்பாக அவருக்கு பெண்கள் மத்தியில் வரவேற்பு குறைவு, எதிர்ப்பு அதிகம். சில நெட்டிசன்கள் மிகவும் மோசமாக பதிவிடும் கமெண்ட்களை தனி வீடியோவாவும் பதிவிட்டு அவர்களுக்கு பதிலடி தருகிறேன் என 18 பிளஸ்ஸாகவே அபிநயாவும் சில நேரங்களில் பேசுகிறார்.
இந்நிலையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் சமீபத்தில் ஏற்பட்ட விபத்தால் தனது முகத்தில் ஏற்பட்ட காயம் தொடர்பாக வருத்தப்பட்டு பேசியுள்ளார். அதாவது அந்த வீடியோவில், " மூன்று நாட்களுக்கு முன்னர் சின்ன விபத்து, அதனால் எனது முகத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டது. அதனை நான் ஒரு மணிநேரம்தான் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்திருந்தேன். அதற்கே பலரும் மெசேஜ் செய்து என்ன ஆச்சு என்று கேட்டீர்கள்.

முகத்தில் காயம்: எனக்கு அது மிகவும் அதிர்ச்சியை கொடுத்தது. அதாவது இவ்வளவு பேர் இருக்கிறார்களா? எனக்கு ஏதாவது என்றால் கேட்பதற்கு இவ்வளவு பேர் இருக்கிறார்களா என்று ஆச்சரியமாக இருந்தது. அதே நேரத்தில் சோகத்திலும் மகிழ்ச்சியாக இருந்த விஷயம் நமக்காக இவ்வளவு பேர் இருக்கிறார்களா என்பதுதான். எனது நலன் குறித்து விசாரித்தவர்கள், எனக்கு நம்பிக்கை கொடுத்தவர்கள் என அனைவருக்கும் ரொம்பவும் நன்றிகள். முகத்தில் இது போல ஆகிவிட்டது என்பதால் வீடியோ போட வேண்டாம் என்று நினைத்தேன்.
திறமைதான் எல்லாம்: அதன் பின்னர் முகத்தில் இப்படி இருந்தா என்ன? நமது திறமைக்கு தான் மதிப்பு என, எனது நம்பிக்கையை அதிகரித்துக்கொண்டு, இனிமேல் நான் எப்படி இருந்தாலும் பரவாயில்லை வீடியோ போடலாம் என முடிவு செய்துள்ளேன். இந்த ஆதரவை எனக்கு தொடர்ந்து கொடுங்கள்" என்று பேசியுள்ளார். இவரது இந்த வீடியோவைப் பார்த்த அவரைப் பின் தொடரும் இணையவாசிகள் கமெண்ட்களை வாரி வழங்கி வருகிறார்கள்.
வழியும் ரசிகர்கள்: அதாவது இணைய வாசி ஒருவர், " உனக்கு நேச்சுரல் தான் அழகு செல்ல குட்டி. தயவு செய்து மேக்கப் போடாத மஞ்சள் தேச்சி குளி. உன்னோடு முகத்திலுள்ள பரு நீங்கி விடும்" எனவும் மற்றொருவர், "அழகு முக்கியமில்லை.. தன்னம்பிக்கை தான் முக்கியம்" என பதிவிட்டுள்ளார். அதே நேரத்தில் கன்னத்தில் உள்ள காயத்தை பார்த்தால் யாரிடமோ நீங்க அடி வாங்கியது போல் உள்ளதே எனவும் தெரிவித்துள்ளார். இவரது இந்த போஸ்ட் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











