நான் சீனியில் செய்த கடல்.. எக்குத்தப்பான அழகா இருக்கே.. இணையத்தை திணறவிடும் இன்ஸ்டாகிராம் பிரபலம்!
குரோஷியா: சமீப காலமாக தனது ஹாட் புகைப்படங்களால் இணையத்தை திணறவிட்டு வருகிறார் இந்த குரோஷியா நாட்டு அழகி இவானா.
மிஸ் குரோஷியா பட்டம் வென்ற இவர், உள்ளாடை விளம்பரங்கள், மாடலிங் என ஏகப்பட்ட வேலைகளையும் செய்து அசத்தி வருகிறார்.
இவர் வெளியிடும் பீச் பிகினி புகைப்படங்களை பார்த்தால் நிச்சயம் ரசிகர்களுக்கு தூக்கமே கெட்டுப் போய்விடும். அந்த அளவுக்கு ஹாட்னஸ் புகைப்படங்களை களமிறக்கி வருகிறார்.

மிஸ் குரோஷியா
ஐரோப்பாவின் தென் கிழக்கு நாடான குரோஷியாவில் பிறந்து வளர்ந்து வசித்து வருகிறார் Ivana Knoll. 2016ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் குரோஷியா அழகிப் போட்டியில் கலந்து கொண்டு பட்டம் வென்றுள்ளார். 27 வயதாகும் இவர், இன்ஸ்டாகிராமில் பதிவிடும் புகைப்படங்களுக்கு ஏகப்பட்ட லைக்குகளும், கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

சியர் லீடர்
2018ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் சியர் லீடராக இருந்து கால்பந்தாட்ட வீரர்களை குஷிப்படுத்தியர் இவர். மாடலிங், விளம்பரங்கள், இன்ஸ்டாகிராம் பிரபலம் என ஏகப்பட்ட பணிகளில் தற்போது தன்னை ஈடுபடுத்திக் கொண்டு படு பிசியாகி வருகிறார் இவானா.

டிக்டாக் பிரபலம்
மேலும், படு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு டிக்டாக் செய்து அந்த வீடியோக்களை பதிவிட்டு ஏகப்பட்ட ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் இவானா. இவரது டிக்டாக் பக்கத்திற்கு சென்றால் ஏகப்பட்ட நீச்சல் குள வீடியோக்களை ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம். இந்திய ரசிகர்கள் இவரது இன்ஸ்டாகிராமை ஃபாலோ செய்து பாக்கியம் பெறலாம்.

ஊர் சுற்ற இஷ்டம்
பொதுவாகவே மாடல் அழகிகளின் வாழ்க்கையில் டிராவலிங் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. தனது கவர்ச்சியான உடலை ஒவ்வொரு இடங்களுக்கு ஏற்ப மேக்கப் செய்து கொண்டும், அந்த இடத்திற்கு ஏற்ப பிகினி உடைகளை அணிந்து கொண்டும் போஸ் கொடுத்து வைரலாக்குவார்கள். இவானாவுக்கும் ஊர் சுற்றுவது என்றால் கொள்ளை இஷ்டமாம்.

டாப்லெஸ்
நீச்சல் குளத்தில் மேலாடை அணியாமல், அரை நிர்வாணமாக திரும்பி நின்றபடி முழு முதுகையும் காட்டி ரசிகர்களை இவர் பதற வைத்த புகைப்படங்கள் எல்லாம் லட்சக் கணக்கில் லைக்குகளை அள்ளி உள்ளன. விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர், பீச் வாலி பால் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடும் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.
Recommended Video

கடலே கதி
கடற்கரை நகரமான குரோஷியாவில் பிறந்து வளர்ந்த காரணத்தால், இவரது இன்ஸ்டாகிராம் முழுவதும் கடலுக்கடியில் மிதந்து கிடப்பது போலவே இருக்கிறது. ஏகப்பட்ட பீச் புகைப்படங்களும், பிகினி தரிசனங்களுமாகவே காட்சியளிக்கிறார் இவானா. சீக்கிரமே ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை.


Click it and Unblock the Notifications











