Good Touch.. Bad Touch லாம் வேணாம்.. Don't Touch தான் ஒரே தேர்வு.. பிக் பாஸில் கமல் அதிரடி!

சென்னை: அம்பேத்கர், காந்தி கடிதங்களுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் கமல் பேசிய இன்னொரு விஷயம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஷிவின் வரைந்த அந்த பள்ளி செல்லும் சின்னஞ்சிறு சிறுமிக்கு கூட பாலியல் பலாத்கார தொல்லைகள் உள்ளிட்ட பல்வேறு தடைகள் வருவதை வெளிப்படுத்திய ஓவியத்தை வெகுவாக பாராட்டினார் கமல்.

குழந்தைகளுக்கு Good Touch.. Bad Touch லாம் சொல்லிக் கொடுக்கிறதுக்கு நல்ல விஷயம் தான். ஆனால், அந்த பிஞ்சுகளை தொடும் கைகளுக்கு அதை யார் சொல்லிக் கொடுப்பது என கமல் பேசியது பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.

பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் கமலின் இந்த பேச்சை ஷேர் செய்து பாராட்டி வருகின்றனர்.

சுமாரான ஓவியர்

சுமாரான ஓவியர்

ஓவியர்களை பார்த்தாலே எனக்கு ரொம்ப பொறாமை ஆகிவிடும் நான் சுமாரான ஓவியர் கூட இல்லை ரொம்ப சுமாரான ஓவியர் என பேசிய கமல் அடுத்து ஷிவின் வரைந்த அந்த ஓவியத்தை ஸ்டேஜில் எடுத்து வந்து வைத்து அது தொடர்பாக பேசியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

பாலியல் தொல்லை

பாலியல் தொல்லை

ஷிவின் வரைந்த ஓவியத்தில் பள்ளிக்கு செல்லும் பிஞ்சு பெண் குழந்தைகளுக்கும் பாலியல் தொல்லை போன்ற விஷயங்கள் நிகழ்கின்றன. படிக்க நினைக்கும் பெண்கள் பல இடங்களில் இதுபோன்ற பிரச்சனைகளை சந்திப்பது வெட்கக் கேடானது என்பதை உணர்த்தும் இந்த ஓவியம் தன்னை மிகவும் கவர்ந்தது என பாராட்டினார் கமல்.

டோன்ட் டச்

டோன்ட் டச்

குழந்தைகளுக்கு குட் டச் மற்றும் பேட் டச் சொல்லிக் கொடுக்கிறோம். ஆனால், அவர்களை தொடும் கைகளுக்கு யார் அதை சொல்லிக் கொடுப்பது என்கிற கேள்வியை எழுப்பிய கமல்ஹாசன் Don't Touch என்பது தான் ஒரே தீர்வாக இருக்க முடியும் என பேசியதும் ஹவுஸ்மேட்ஸ் மற்றும் அரங்கில் இருந்த அனைவரும் அவரது கருத்தை வெகுவாக வரவேற்றனர்.

ஏடிகே ஓவியம்

ஏடிகே ஓவியம்

கிட்னி ஸ்டோன் பிரச்சனை காரணமாக திடீரென மயங்கி விழுந்த ஏடிகே நிகழ்ச்சி முடிந்ததும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார். ஆனால், கமல்ஹாசன் நிகழ்ச்சியின் போது இன்னொரு ஓவியமாக ஏடிகே வரைந்த பல கதவுகள் திறந்து கிடக்கும் ஓவியத்தை பாராட்டி மாணவர்கள் பரிட்சையில் பாஸ் ஆகவில்லை என்பதற்காக சோர்ந்து விடக் கூடாது. பல கதவுகள் உள்ளன என்று கூறி மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X