ரெட் ஜெயண்ட் புயலில் சிக்காமல் தப்பித்த ஒரே படம்...இத மட்டும் எப்படி மிஸ் பண்ணினாங்க?

சென்னை : அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்கள், பெரிய பட்ஜெட் படங்களை வரிசையாக கைப்பற்றி வரும் ரெட் ஜெயிண்ட் மூவிசிடம் இருந்து ஒரு படம் மட்டும் தப்பி உள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை தந்துள்ளது.

தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர் என பல முகங்களைக் கொண்ட உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். விஜய் நடித்த குருவி படத்தில் துவங்கி பல படங்களை தயாரித்து வந்த ரெட் ஜெயண்ட் மூவிஸ், தற்போது பல படங்களை விநியோகம் செய்து வெளியிட்டு வருகிறது.

சுழன்றடிக்கும் ரெட் ஜெயண்ட்

சுழன்றடிக்கும் ரெட் ஜெயண்ட்

குறிப்பாக கடந்த சில மாதங்களாக பெரிய நடிகர்கள் நடித்த படங்கள், பெரிய பட்ஜெட் படங்கள், அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களை வரிசையாக வாங்கி, வெளியிட்டு வருகிறது. 2021 ல் சுந்தர்.சி இயக்கிய அரண்மனை 3, ரஜினியின் அண்ணாத்த படங்களின் வெளியீட்டு உரிமத்தை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட் மூவிஸ், 2022 ல் புயல் போல் சுழன்று அடித்து வருகிறது.

இத்தனை படங்களா

இத்தனை படங்களா

2022 ம் ஆண்டின் துவக்கத்தில் விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், ராஜமெளலி இயக்கிய ஆர்ஆர்ஆர், பிரபாஸ் நடித்த ராதே ஸ்யாம் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டது. இந்த படங்களைத் தொடர்ந்து விக்னேஷ் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல், விஜய்யின் பீஸ்ட், கமலின் விக்ரம் ஆகிய படங்களை கைப்பற்றி உள்ளது.

அடுத்து யாருடைய படம்

அடுத்து யாருடைய படம்

பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதியும், காத்துவாக்குல ரெண்டு காதல் ஏப்ரல் 28 ம் தேதியும், விக்ரம் ஜுன் 3 ம் தேதியும் ரிலீசாக உள்ளன. ரஜினி, கமல், விஜய் ஆகிய டாப் நடிகர்களின் படங்களின் வெளியீட்டு உரிமங்களை வரிசையாக கைப்பற்றி வரும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் அடுத்து யாருடைய படத்தின் வெளியீட்டு உரிமத்தை வாங்க போகிறது என அனைவரும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இவர் மட்டும் எப்படி தப்பினார்

இவர் மட்டும் எப்படி தப்பினார்

ஆனால் சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்கே 20 படத்தை தமிழ்நாட்டில் தியேட்டர்களில் வெளியிடும் உரிமத்தை கோபுரம் சினிமாஸ் வாங்கி உள்ளது. படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் பாதி முடிவடையும் முன்பே படத்தின் வெளியீட்டு உரிமத்தை கோபுரம் சினிமாஸ் வாங்கி விட்டது. ரஜினி, கமல், விஜய் படங்களை வாங்கிய ரெட் ஜெயண்ட் மூவிஸ் எப்படி சிவகார்த்திகேயனின் இந்த படத்தை மட்டும் வாங்காமல் விட்டது.

ரெட் ஜெயண்ட் மூவிசிடம் இருந்து தப்பித்த ஒரே படம் சிவகார்த்திகேயனின் எஸ்கே 20 படம் மட்டும் தானா என அனைவரும் கேட்டு வருகின்றனர். அதே சமயம் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் படத்தின் தமிழ்நாட்டு தியேட்டர் வெளியீட்டு உரிமத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் வாங்கி உள்ளது. இதற்காக டான் டீம் நேற்று உதயநிதி ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X