சீ சீ சீ ரே நானி பாட்டுக்கு இப்படி ஒரு கதை இருக்கா? அட பாவமே.. இப்படி ஒரு சோகமா?
சென்னை: இணையத்தில் எது எப்போது டிரெண்ட் ஆகும் என சொல்ல முடியாது. காரணம், இணையவாசிகள் மத்தியில் இயல்பாகவே பல விசயங்கள் பிடித்துப்போய் அதனை டிரெண்ட் செய்து விடுகின்றனர். இப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன்னர் கிருபை என்ற பாடல் செம வைரல் ஆனது. அதேபோல் இப்போது ஒடியா மொழியைச் சேர்ந்த சீ சீ சீ ரே நானி சீ என்ற பாடல் இந்தியா முழுவதும் டிரெண்டிங்கில் உள்ளது. இது இந்தப் பாடல் குறித்தும், பாடல் உருவான விதம் குறித்தும் இந்தத் தொகுப்பில் காணலாம்.
இப்போது டிரெண்டிங்கில் இருக்கும் இந்த சீ சீ பாடல் கடந்த 1992ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு வெளிட்யிடப்பட்டது. பலிபுல் என்ற நாட்டுப்புற பாடல்களை உள்ளடக்கிய பாடல் தொகுப்பில் இந்தப் பாடல் இடம் பெற்றுள்ளது. இந்தத் தொகுப்பில் மொத்தம் 8 பாடல்கள் உள்ளது. அதில் ஒரு பாடல்தான் தற்போது டிரெண்டாகி வரும் சீ சீ பாடல். இந்தப் பாடலை ஓடியா இசைக் கலைஞர் சத்ய நாராயணன் இசை அமைத்து, பாடல் எழுதி, பாடியும் உள்ளார். இவர் இந்த பலிபுல் ஆல்பத்தினை உருவாக்க காரணமே, ஒடிசாவின் மரபுகளைச் சிதைக்காமல், அதனை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கியுள்ளார்.

காதல் தோல்விப் பாடலான இந்தப் பாடலின் காட்சி உருவாக்கத்தினை இணையவாசிகள் முதலில் ட்ரோல் மெட்டீரியலாக மாற்றி இணையத்தில் பகிர்ந்தனர். ஆனால் இது தொடக்கத்தில் இணையவாசிகளால் கிண்டல் அடிக்கப்பட்டாலும், போகப் போகப் பாடல் பலரது மனதைக் கவர்ந்துவிட்டது. இதனால் இணையவாசிகள் இந்தப் பாடலை பாசிடிவாக டிரெண்ட் செய்யத் தொடங்கிவிட்டனர். தமிழ்நாட்டில், இந்த பாடலுக்கு ஏற்ற தமிழ் பாடல் எது என தேடி எடுத்து அதோடு இணைத்து பகிர்ந்து வருகின்றார்கள்.
அதிர்ச்சி: இதுமட்டும் இல்லாமல், ஒடியா மொழியில் இருக்கும் சீ சீ பாடலுக்கான தமிழ் அர்த்ததைக் கண்டுபிடித்து, அதனை பாடலின் மெட்டுக்கு ஏற்ற வகையில் பாடி, அதையும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இந்த அளவிற்கு இணையவாசிகளின் மனம் கவர்ந்த இந்தப் பாடலை உருவாக்கியவர் குறித்த தகவல் இணையவாசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.
யூடியூப் : முதலில் இந்தப் பாடலை சித்தார்த் சம்பல்பூரி என்ற யூடியூப் சேனலில் சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்னர் பதிவேற்றம் செய்துள்ளனர். இதனால் பல லட்சம் பார்வையாளர்களை இந்தப் பாடல் சென்றடைந்துள்ளது. மேலும் இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து இந்தப் பாடல் டிரெண்ட் ஆவதை கவனித்தோம். இது மட்டும் இல்லாமல், சித்தார்த் தனது மியூசிக் யூடியூப் சேனலிலும் இந்தப் பாடலை பதிவேற்றம் செய்துள்ளார்.

டிரெண்ட் : இப்போது இந்தப் பாடல் டிரெண்ட் ஆகியுள்ளது. ஆனால் இந்தப் பாடலை உருவாக்கிய சத்ய நாராயணன் கடந்த 2012ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி உடல்நலக் குறைவால் மறைந்துவிட்டார். அப்படி இருந்தும் பாடல் வெளியாகி கிட்டத்தட்ட 33 ஆண்டுகள் ஆகியும் அதாவது ஒரு தலைமுறை கடந்தும் பாடல் பலரது கவனத்தினை ஈர்த்து, இன்றைய இணைய உலகில் பாராட்டுகளைப் பெற்று வருகின்றது என்றால், இது எல்லாம், சத்ய நாராயணனுக்குத்தான் சேரும் எனவும் அவர் தனது இசையால் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார் என அந்தப் பாடலில் நடித்தவர் கூறுகின்றார்.


Click it and Unblock the Notifications











