குஷ்பூக்கு மயில், திரிஷா ரிஷபம், நமீதா ஸ்டார்.... பிரபலங்களின் டேட்டூஸ் என்கிற பச்சை குத்தல்...
சென்னை: அந்தக்காலத்தில் நம் பாட்டிமார் தாத்தாவின் பெயரையோ அல்லது குலதெய்வத்தின் பெயரையோ கையில் பச்சைக்குத்தி பார்த்திருப்போம்.
காலப்போக்கில் தனக்கு பிடித்தமான் தலைவர்கள் அல்லது நடிகர்களின் பெயர்களை பச்சை குத்திய இளசுக்களை காண முடிந்தது.
பின்னாளில் அதுவும் மறைந்து போக, தற்போது டேட்டூஸ் என்ற பெயரில் நாகரீகமாக வலைய வருகிறது பச்சை குத்து. மாடர்ன் ஆர்ட் போல் என்ன டேட்டூஸ் என்பதை புரிந்து கொள்ளவே சற்று, உற்று பார்த்து யோசிக்க தான் வேண்டியுள்ளது.
சரி, பிரபல நடிகர், நடிகைகள் அப்படி என்னதான் டேட்டூச் குத்தியிருக்கிறார்கள் என்று ஒரு ரவுண்ட் பார்ப்போமா...

ஹிருத்திக்
ஹிருத்திக் மற்றும் அவரது மனைவி இருவரும் காதலை பிரதிபலிக்கும் விதமாக ஆறு நட்சத்திரங்களை வரைந்துள்ளனர். ஹிருத்திக்கின் மணிக்கட்டில் சூசனின் பெயர் சூசகமான மாடலில் வரையப்பட்டிருக்கிறது.

சயீப் அலிகான்
சயீப் அலிகான் தனது முன்னாள் காதலி, தற்போதைய மனைவி கரீனா கபூரின் பெயரை கையில் டேட்டூவாக வரைந்து தன் காதலை சொல்கிறாராம்.

மேகன் போக்ஸ்
மேகன் போக்ஸ் தன் மேனியில் ஷேக்ஸ்பியர் ம்ற்றும் நீட்ஸ்ன் வார்த்தைகளை, கவிதைகளாக மழையைபோல் ஆங்காங்கே கொட்டி இருக்கிறார்.

அக்ஷய் குமார்
அக்ஷய் குமார் தனது முதல் மகனின் பெயரான ஆரவ் என்பதை வரைந்துள்ளார்.

தீபிகா படுகோன்
ரன்பீருடன் காதலில் கரைந்த போது வரைந்த ஆர்.கே என்பதை தற்போது ரீடிசைன் செய்துள்ளார் தீபிகா படுகோன்

ஸ்ருதி
வம்பே இல்லாமல் தன் பெயரை அழகிய தமிழில் வரைந்துள்ளார் ஸ்ருதி

ரன்பீர் கபூர்
ரன்பீர் கபூர் ஆவார் என்ற 1951ல் வெளி வந்த வெற்றிப்படமான ராஜ் கபூரின் திரைப்படப் பெயரை டேட்டூவாக வரைந்துள்ளார்.

சுஷ்மிதாசென்
சுஷ்மிதாசென் நான் என்றும், டெம்ட்டேஷன் என்றும், குளோரி டு காட் அலோன் என்றும் உடலில் வெவ்வேறு இடங்களில் வரைந்துள்ளார்.

மரூன்
பாடகரான மரூன் கையில் தபஸ் என்ற வார்த்தையை வரைந்து யோகாவிற்காக வரைந்துள்ளதாக விளக்கம் வேறு கொடுத்துள்ளார்.

ஏஞ்சலீனா
ஏற்கனவே 13 முறை டாட்டூச் குத்தி உள்ள ஏஞ்சலீனா, பழையவற்றை எல்லாம் இவை நினைவூட்டுவதாக கூறியுள்ளார். தனது தத்து குழந்தைகளின் ஊர்களை வரிசைப்படுத்தி கையில் ஒரு டாட்டூஸ் உள்ளது.

அல்லு அர்ஜூன்
தன் மனைவியின் பெயரைத் தனது கையில் பொறித்து, தான் நிஜ வாழ்க்கையிலும் சிறந்த காதலன் தான் என்பதை நிரூபித்துள்ளார் அல்லு அர்ஜூன்

ரிஹானா
வெளியில் தெரிவது போல் மட்டும் 30 டாட்டூஸ் குத்தியுள்ள ரிஹானா, அவை அனத்தும் தனக்கும் கடவுளுக்குமான உறவின் அடையாளம் என்கிறார்.

கங்கணா
கங்கணா போர் கழுகு போன்ற உருவத்தைக் கழுத்தில் பின்புறமாக வரைந்துள்ளார்.

பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ரா தந்தையின் செல்ல மகள் என்பதை உணர்த்தும் விதமாக சமீபமாக தந்தையின் பெயரை வரைந்து வலைய வருகிறார்

திரிஷா
நம்மூரு திரிஷா அவரின் ரிஷப அடையாளத்தை கையில் வரைந்துள்ளார்.

நிகோல்
தனது மத நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் வகையில் காலில் கொலுசு போன்ற அமைப்புடன் சிலுவையையும் சேர்த்து வரைந்துள்ளார் நிகோல்

குஷ்பூ
மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னமே மயிலுக்கு தோள் கொடுத்த பாரி நம்ம குஷ்பூ.

நயன்தாரா
வளையலைப் போட்டு மறைத்தும், உலகிற்கு தெரிந்தே சேர்ந்தும், பின் பிரிந்தும் போன நயன்தாரா கையில் பிரபு என வரைந்திருந்தார்.

மமதா
மமதா பிள்ளையாரை கையில் வரைந்து தன் பக்தியை பறைசாற்றுகிறார்.

நமீதா
நமீதாவே ஒரு ஸ்டார் தான். அவர் முதுகில் எத்தனை ஸ்டார்ஸ்..


Click it and Unblock the Notifications











