Ramya Pandiyan: இத நோட் பண்ணுங்க.. ரம்யா பாண்டியன் மணம்முடித்தவர் இப்படியான வேலையைப் பார்த்தவரா?
சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் மட்டுமே தங்களுக்கு பட வாய்ப்புகளே இல்லை என்றாலும், கிளாமர் பக்கம் செல்ல மாட்டார்கள். அப்படியான நடிகைகளில் ஒருவர் ரம்யா பாண்டியன். பிரபல இயக்குநர் துரை பாண்டியனின் மகள், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண் பாண்டியனின் அண்ணன் மகள் என சினிமா பாரம்பரியத்தில் இருந்து வந்திருந்தாலும், சினிமாவில் கொடி கட்டிப் பறக்கவேண்டும் என்பதற்காக கிளாமர் பாக்ஸை டிக் செய்யாமல் இருந்தார். தற்போது அவர் திருமணம் முடித்துள்ளார். அவர் திருமணம் முடித்துள்ள லோவல் தவான் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளிவந்திருக்கின்றது.
ரம்யா பாண்டியனுக்கும் லோவல் தவானுக்கும் நேற்று அதாவது, நவம்பர் 8ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர் யோகா மாஸ்டர் லோவல் தவான் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பான தகவல்கள் இணையத்தை திறந்தாலே வந்து குவிகின்றது. ரம்யா பாண்டியன் சினிமாவில் அதிகம் நடிக்கவில்லை என்றாலும், சின்னத்திரையிலும் சமூக வலைதளத்திலும் அவரின் ஆக்டிவிட்டி ரசிகர்கள் மனதில் அவருக்கென தனி இடத்தினைப் பெற்றுக் கொடுத்தது எனலாம்.

இதுமட்டும் இல்லாமல், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசன், பிக் பாஸ் சீசன் 3இன் மூன்றாவது ரன்னர் அப் என இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாகக் கிடைத்தது. கொரோனா காலத்தில் வேகமெடுத்த இணையத்திலும் கொடிகட்டிப் பறந்தார் ரம்யா பாண்டியன். இவர் கடந்த சில வரங்களுக்கு முன்னர் தனது காதலரை அறிமுகம் செய்து வைத்தார். இப்படியான நிலையில், நேற்று திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது.

ரம்யா பாண்டியன்: நடிகை ரம்யா பாண்டியன் திருமணம் செய்துகொண்டுள்ள நபரானா லோவல் தவான் அடிப்படையில் யோகா மாஸ்டர். இவருக்கும் ரம்யா பாண்டியனுக்கும் அறிமுகம் ஏற்பட்டதே யோகா க்ளாஸின்போதுதானாம். தொடக்கத்தில் இருவருக்கும் இடையில் இருந்த அறிமுகம், நட்பாக மாறி, அதன் பின்னர் காதலாக மாறியது. இப்படியான நிலையில், இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவிக்க, நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது.

யோகா மாஸ்டர்: லோவல் தவானைப் பொறுத்தவரையில் இந்தியாவின் தலைசிறந்த யோகா மாஸ்டர்களில் ஒருவாராக அறியப்படுகின்றார். குறிப்பாக இந்தியாவில் ஆன்மீகத் தலைவராக அறியப்படும் ஸ்ரீ ஸ்ரீ குருதேவ்வின் மிகவும் நெருக்கமான வட்டாரங்களில் இவரும் ஒருவர் என கூறப்படுகின்றது. மேலும் சிவராத்திரி காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பயணப்பட்டு சிறப்பு யோகா வகுப்புகள் எடுக்கும் அளவிற்கு புகழ் பெற்ற யோகா மாஸ்டர் எனவும் கூறப்படுகின்றது.

கமெண்ட்: இவர் இதுமட்டும் இல்லாமல் தனியாக ஆர்ட் ஆஃப் லிவிங் என்ற மைய்யத்தினை உருவாக்கி அதனை சிறப்பாக நடத்தியும் வருகின்றார். இதன் மூலம் லைஃப் கோச்சாகவும் ஹீலராகவும் திகழ்கின்றார். இவரின் பயோடேட்டாவை கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும், யோகா மாஸ்டரா இருந்துகிட்டு, எங்க ரம்யா பண்டியனை ஈஸியா கரைக்ட் பண்ணீட்டியே மேன்" என கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











